மட்டக்களப்பு உயர் தொழிநுட்ப கல்லூரி அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடல்(ஆதிப் அஹமட் )

உயர்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் கோவில்குளத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு உயர் தொழிநுட்ப கல்லூரி அபிவிருத்தி தொடர்பிலான விஷேட கலந்துரையாடல் நேற்று(13) பாசிக்குடா காம் ஹோட்டலில் நடைபெற்றது.

நகர திட்டமிடல்,நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்களுக்கும் கல்லூரியின் கல்வி இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன் அவர்களுக்குமிடையில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில் இந்த உயர் தொழிநுட்ப கல்லூரி பிரிவை (ATI (Section)  உயர் தொழிநுட்ப கல்லூரியாக தரமுயர்த்துவது சம்பந்தமாகவும், கல்லூரிக்கான காணி கொள்வனவு மற்றும் ஏனைய அபிவிருத்திகள் தொடர்பிலும் விஷேடமாக ஆராயப்பட்டதுடன் மேற்படி வேண்டுகோளை நிறைவேற்றுவதாக அமைச்சர் றவூப் ஹக்கீம் உறுதியளித்தார்.கடந்த வாரம் இந்த கல்லூரிக்கு  விஜயம் மேற்கொண்டு இங்குள்ள குறைபாடுகளை ஆராய்ந்த அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்களின் இணைப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் அவர்கள் இந்த விடயங்களை அமைச்சரின் கவனத்துக்கு  கொண்டு வந்ததைத்தொடர்ந்து இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments