கெக்கிராவ ஸஹானா நினைவேந்தல் நிகழ்வும் " ஈழத்து இலக்கிய உலகில் கெக்கிராவ ஸஹானாவின் இலக்கியத்தடம்” எனும் நூல் வெளியீடும்கெக்கிராவ ஸஹானா நினைவேந்தல் நிகழ்வும் " ஈழத்து இலக்கிய உலகில் கெக்கிராவ ஸஹானாவின் இலக்கியத்தடம்” எனும் நூல் வெளியீடும் கடந்த 12.01.2019 காலை 10.00 மணி கெக்கிராவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மேமன்கவி தலைமையில் இடம் பெற்றது.

இந்த நிகழ்வின் தலைமையுரையில் மேமன்கவி, ''மிகச் சிறந்த ஒரு நேசத்தை நாங்கள் இழந்து நிற்கிறோம்.ஸஹானா ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் தனித்துவமான ஒர் ஆளுமையாக வளர்ந்தவர். அவரது படைப்புகள் வெறுமனே கற்பனைப் படைப்புகள் அல்ல. தன்னைச் சுற்றியிருந்த வாழ்வியலை நன்கு அவதானித்து எந்தவொரு கோட்ட்ஐ பற்றியோ,கருத்தியலை பற்றியோ, யோசிக்காமல் , தான் எதிர் கொண்ட யதார்த்ததை தன் எழுத்தில் தந்தவர். கெக்கிராவ எனும் ஊரைத் தமிழ் இலக்கியத்தில் வாழ வைத்தவர்''. இவ்வாறாக ஸஹானா பற்றிக் குறிப்பிட்டு அவரது தமிழ் கலை இலக்கியத் தொடர்ப்பை பற்றிக் குறிப்பாக ஜெயகாந்தன் என்று இலக்கிய ஆளுமையுடன் கொண்டிருந்த நேசத்தைப் பற்றிப் பிரஸ்தாபித்தார்.நினைவேந்தல் உரை நிகழ்த்திய ஸஹானாவுடன் ஆசிரியையாகப் பணியாற்றி எம்.எம். பரீனா ஆசிரியை, ''சிங்கள இராஜதானிய பிரதேசம் ஒன்றில் தமிழ் இலக்கிய ஆளுமையாகத் தோற்றம் ஸஹானா சிறந்த இலக்க்கிய ஆளுமையாக மட்டுமல்லாமல். சிறந்த ஆசிரியையாகவும் பணியாற்றி ஒவ்வொரு மாணவ மணிகளைத் தன் பிள்ளைகளைப் போல் பராமரித்தார். ' என்றார்.


ஸஹானூவுடன் பணியாற்றிய இன்னுமொரு ஆசிரியரான எம். ஜி.எம். கரீம் அவர்கள் .'' ஸஹானா ஒரு சிறந்த எழுத்தாளராகவும் . சிறந்த ஆசிரியையாகவும் பணியாற்றிச் சென்று இருக்கிறார். அவரது இலக்கிய பங்களிப்புகள் மூலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் அவர் என்றும் வாழுவார்.'' என்றார்.

ஸஹானாவின் மாணவியும் இன்றைய தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவியுமான எஸ். ஷீரிபா பீவி மறைந்த தனது ஆசிரியைக்கான கவிதா அஞ்சலியைச் செலுத்தினார். அடுத்துக் கலாவெவ பிரதேசத்திலிருந்து வளர்ந்து வரும் கவிஞரான கலாவெவ ஸப்ரி தன் பிரதேசத்து இலக்கிய ஆளுமையான ஸஹானாபற்றி தனது கனிந்த சொற்களால் கவிதை அஞ்சலி செய்தார்.

இறுதியாக நினைவேந்தல் உரை நிகழ்த்திய நாச்சியாதீவு பர்வீன், ஸஹானா குடும்பத்துடனான தனது உறவை விவரித்து, தனது இலக்கிய வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டவராக ஸஹாளா திகழ்ந்தார். அவர் தனக்குத் தனது இலக்கியத் தாயாகத் திகழ்ந்தார். என இறுக்கமானதுமான நினைவேந்தல் உரையை நிகழ்த்தினார்.


நன்றியுரையை நிகழ்த்திய கெக்கிராவ ஸஹானாவின் சகோதரியும் கெக்கிராவ முஸ்லிம் மகா வித்தியாலய அதிபருமான கெக்கிராவ ஸூலைஹா, ''தனது சகோதரியின் இழப்பு சாதாரணமாகச் சொல்லும் பேரிழப்பு என்று சொல்லுக்கு அப்பாலான ஒர் இழப்பு எனக்கு. என் வாழ்வில் அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவருடன் இலக்கிய உலகில் நானும் அடையாளப்படுத்தப்பட்டேன். இன்று நான் தனித்துப் போய் விட்டேன். என மிக உருக்கமான ஒரு நன்றியுரையை நிகழ்த்தினார்.

இந் நிகழ்வில் ஸஹானாவின் குடும்பத்துடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தவரும், ஸஹானாவின் பல நூல்களைப் பதிப்பித்தவருமான ஜீவநதி பரணீதரன் வெளியிட்ட " ஈழத்து இலக்கிய உலகில் கெக்கிராவ ஸஹானாவின் இலக்கியத்தடம் எனும் நூலும் வெளிடப்பட்டு வருகை தந்தவர்களுக்கு வழங்கப்பட்டது.


நேகம பஸான் இடைக்கிடையே கெக்கிராவ ஸஹானா அவர்களைப் பற்றித் தனது பகிர்ந்து கொண்டதோடு. நிகழ்ச்சிகளைச் சிறப்பான முறையில் தொகுத்து வழங்கினார்

No comments