கொந்தராத்து பணிகள் சிறப்பாக இடம் பெறவேண்டுமாயின் கொமிஷன் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் பொறியியலாளர் சிப்லி பாறுாக் தெரிவிப்புகொந்தராத்து பணிகள் சிறப்பாக இடம் பெற வேண்டுமாயின் கொமிஷன் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டும் இல்லையேல் ஹறாத்தை உண்பவர்களாகவும்,மற்றவர்களை ஏமாற்றிபொதுப்பணத்தை கொள்ளையடிக்கும் நயவஞ்சகர்களும்தான்  அதிகம் நடமாடுவார்கள். இந்த விடயத்தை நாம் ஒவ்வொருவரும் அரசியலுக்கு அப்பால் சிந்தித்து நடவடிக்கை மேற்கொள்ள முன்வர வேண்டும் என பொறியியலாளர் சிப்லி பாறுாக் தெரிவித்தார்..........

தொடர்ந்து கருத்து தெரிவி்த்த முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், இன்னால் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் சிப்லி பாறுாக்....... 

கொந்தராத்து  வேலை செய்யும் ஒரு சகோதரரை  தான் கடந்த (14.01.2019 திங்கள்) சந்தித்ததாகவும்  ஊரில்  செப்பனிடப்படும் வீதிகள் தரமில்லாமல் இருக்கின்றது, சரியான கலவைகளை தயாரித்து நல்லமுறையில், மட்டங்களை சரிபார்த்து கொங்றீட் வீதிகளை அமைத்தால் மக்களுக்கு நீண்டகாலம் அதனை பாவிக்க முடியும் என்று   தெரிவித்துள்ளார்.
அதற்கு அவர் பதில் அளித்த குறித்த கொந்தராத்துக்காரா்………..
நாங்கள் முடியுமானவரை  தரமாகத்தான்  செய்யப்பார்க்கிறோம் ஆனால் எங்களுக்கு கொந்தறாத்து கொடுப்பவர்கள் 10% , 15% என்று commission கேட்டா எப்படி அதையும் கொடுத்து நாங்களும் இலாபம் அடைவது ஒரு கொந்திறாத்திற்கு விலைமதிப்பு  செய்யும் போது  அதில் 14% தான் இலாபம் வைத்து  செய்கிறார்கள்  அது முழுசா கிடைச்சா நாங்களும் சந்தோசமாக  மனம் வைத்து  அதிக  நேரம்  ஒதுக்கி வேலையை  திருப்தியாய்  செய்யலாம்  ஒரு நாள் வேலை மேலதிகமாகச் சென்றால் அன்றைய கூலியாட்கள் கூலி எங்கள் மொத்தலாபத்தை மட்டுமல்ல சில வேளைகளில் எங்களுக்கு பெருத்த நஷ்டத்தையும் ஏற்படுத்துகிறது.
என்ன செய்ய சின்ன முதல்களை வைத்துக் கொண்டுதான் நாங்கள் தொழில் செய்கிறோம் ஒப்பந்தம் கையெழுத்திடும் போதே அவங்கவங்க commission வற்புறுத்தி வாங்கிக்கொள்கிறார்கள் வேலையை முடித்து 3 மாத்தத்திற்கு நாய்பாடாப்பட்டு அவங்க இவங்களுக்கு எதையாவது கொடுத்துத்தான் எங்கள் கொடுப்பணவை பெற வேண்டியுள்ளது.

உண்மையில் ஊரில் உள்ள எல்லா கொந்தறாத்துகாறர்களுக்கும் இதுதான் நிலைமை கொந்தறாத்து கொடுக்கிற அரசியல்வாதிகளில் உங்களைத்தவிர அனைவரும் commission இல்லாம வேலைகளை தருவதில்லை. நீங்க ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வேலை கொடுத்தருக்கிறீர்கள் ஆனால் ஒரு வீதம் கூட நீங்கள் கேட்டதும் கிடையாது நாங்களும் தந்தது கிடையாது என்று சொல்லும்போது அல்லாஹ்விற்கு சுக்ர் செய்வதாக தெரிவித்தார்.

மேலும் இந்த commission பெறுவது சமூகமட்டத்தில் எந்தளவு தூரம் தாக்கத்தை செலுத்துகின்றது என்பதை சற்று நோக்கினால்.புஜ்ஜியம்தான் தரமற்ற வீதிகளை கொந்தறாத்துக்காறர் செய்யும் போது  இதனை கேள்விக்குட்படுத்த முடியாமல் தரமற்ற வீதிகளையும் தரம் என்று குறித்த அரசியல்வாதி ஆவணைசெய்து மக்களின் பணத்தை கொள்ளையிடுவது மாத்திரமல்லாது பாவனைக்குதவாத வீதிகளை மக்கள் மீது திணித்து மக்களை கஷ்டத்திற்குட்படுத்தும் செயலாகும் இதற்கு பல வீதிகளை உதாரனமாக கூறமுடியும் என்றும் தெரிவித்தார்எத்தனையோ வீதிகள் இன்னும் செப்பனிடப்படாமல் மண் வீதிகளாகவும், கிறவல் வீதிகளாகவும் இருக்கும் நிலையில் 10 வருடத்திற்கும் மேலாக பாவிக்ககூடிய கொங்றீட் விதிகள் commission என்ற கொடுமையால் தரமற்ற முறையில் வீதிகள் செப்பனிடப்பட்டு ஓரிரு வருடத்திற்குள் மீண்டும் குறித்த ஒரே வீதி மீண்டும் மீண்டும் குறுகிய காலத்திற்குள் செப்னிடப்படுவதால் ஏனைய வீதிகளை செப்பனிடுவதற்கு ஒதுக்கீடு இல்லாததால் ஏனைய மக்கள் தொடர்ந்தும் சிரமத்தில் வாழவேண்டிய நிற்பந்தம் ஏற்படுகின்றது.

இன்னும் இதுபோன்ற எத்தனையோ commissionஆல் ஏற்படும் விளைவுகளை அடுக்கிக் கொண்டு சொல்ல முடியும்.
இப்படி Commission களைப்பெற்றுக் கொண்டு கொந்துறாத்துக்களை வழங்குபவர்கள் 100% மக்களுக்கு அநீதி இளைப்பது மாத்திரமல்லாது ஹறாத்தை உண்பவர்களாக மாறுகின்றார்கள் இப்படியான ஹறாம் உண்பவர்களிடம் இருந்து எப்படி நல்லதை எதிர்பார்க்க முடியும்? எப்பவும் பொய் சொல்லி, மற்றவர்களை ஏமாற்றி, பொதுப்பணத்தை கொள்ளையடிக்கும் நயவஞ்சகர்களாகத்தான் நடமாடுவார்கள். என்றும் தெரிவித்தார்


No comments