தரம் 1 இற்கு மாணவர்கள் அனுமதியும் கற்றல் உபகரணங்கள் வழங்குதலும்.



-பஹ்த் ஜுனைட்-

காத்தான்குடி மட்/மம/அஷ்-ஷுஹதா வித்தியாலயத்தில் தரம் 1 இற்கு மாணவர்களை அனுமதிக்கும் தேசிய தினம் நாடளாவிய ரீதியில்  இடம்பெறுவதை அடுத்து பாடசாலையின் வித்தியாரம்ப நிகழ்வும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் பாடசாலை அதிபர் எம்.சீ.எம்.முனீர் தலைமையில் வியாழக்கிழமை (17) பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது..


தரம் 1 இற்கான மாணவர்களை வரவேற்க்கும் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய அதிகாரி ஏ.ஜீ.எம்.ஹக்கீம் மற்றும் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் இல்மி அஹமட்லெப்பை ஆகியோர் கலந்துகொண்டதுடன் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்தனர்.

இந் நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது..





No comments