மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவிற்கு புதிய உதவிப் பணிப்பாளர் நியமனம்-ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் புதிய உதவிப் பணிப்பாளராக சின்னையா கோகுலராஜா புதன்கிழமை 26.12.20018 கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின்  உதவிப் பணிப்பாளராக ஏற்கெனவே மட்டக்களப்பில் கடமையாற்றிய எம். றியாஸ் அம்பாறை மாவட்டத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்து கோகுலராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

கோகுலராஜா, 2012ம் ஆண்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மாவட்ட நிவாரண இணைப்பாளராக முல்லைத்தீவு மாவட்டத்திலும் அனர்த்த முகாமைத்துவ தலைமைக் காரியாலயத்தில் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவில் உடவிப் பணிப்பாளராக கடமையாற்றி தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளராக கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்;.

No comments