ஏறாவூர் நகர சபையின் அடுத்த ஆண்டிற்கான வரவு- ஏகமானதாக நிறைவேறியது-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- 

ஏறாவூர் நகர சபையின்   அடுத்த ஆண்டிற்கான    வரவு - செலவுத்திட்டம்  வியாழக்கிழமை     20.12.2018  ஏகமானதாக நிறைவேறியதாக நகர மேயர் இறம்ழான் அப்துல் வாஸித் தெரிவித்தார்.

நகர சபையின் 17 உறுப்பினர்களில் வருகை தந்திருந்த            15 உறுப்பினர்களும் வரவு செலவுத்திட்டத்திற்கு           ஆதரவாக வாக்களித்தனர்.

ஏறாவூர் நகர சபையில் ஐக்கிய தேசியக்கட்சி ,           முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு , ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு , ஐக்கிய சமாதானக்  கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் சுயேச்சைக் குழு ஆகிய அணிகளைச் சேர்ந்த                 17 உறுப்பினர்கள் இச்சபையில் அங்கம் வகிக்கின்றனர்.

அடுத்த வருடத்திற்கு எதிர்பார்க்கப்படும் வருமானமாக       137 மில்லியன் 7 இலட்சத்து 63 ஆயிரம் ரூபா எனவும் வருமாக 137 மில்லியன் 7 இலட்சத்து 61 ஆயிரம் ரூபா எனவும் முன்மொழியப்பட்டது.


நகர மேயர் இறம்ழான் அப்துல் வாஸித் மற்றும் உப தவிசாளர்     எம்.எல். றெபுபாசம் ஆகியோர் முன்மொழிவுகளை    சபையில் வாசித்தனர்.

வரவு- செலவுத்திட்டத்தின் வருமான விவரம் வாசிக்கப்பட்டதையடுத்து செலவு விவர வாசித்தலின்போது 'முழுமையாக வாசிக்கத் தேவையில்லை,    அனைத்து விபரங்களும் மிகத்தெளிவாகக் குறிப்பட்டுள்ளதனால் சபை அனுமதி கோரலிற்குச் செல்லலாம்' என            சபை உறுப்பினர்கள் தெரிவித்ததையடுத்து           வரவு செலவுத் திட்டம் விவாதமின்றி ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.