எமது பிரதேசத்தில் உள்ள ஆண்கள் அரச வேலைவாய்ப்பு மற்றும் உயர்பதவிகளில் அக்கரை காட்டுவது குறைவாகவுள்ளது ஏன்?


ஊடகவியலாளர் -எம்.எச்.எம்.அன்வர்-

காத்தான்குடி பிரதேசமானது வியாபாரிகள் கூடுதலாக காணப்படும் ஒரு பிரதேசமாகும். தொழில் புரிவதற்காக உள்ளூரிலும், வெளியூரிலும், கடல்கடந்தும் இங்கு வசிக்கும் மக்கள் தொழில் நிமித்தமாக செல்கின்றனர்.

"காத்தான்குடியான் இல்லாத இடமுமில்லை காகம் பறக்காத ஊருமில்லை" என இந்நாட்டிலுள்ள மக்கள் பேசும் அளவிற்கு எல்லா பிரதேசங்களுக்கும் சென்று மிகவும் கஷ்டப்பட்டு தமது ஜீவனோபாயத்தை தேடிக்கொள்கின்றனர்.

இம்மக்கள் மற்றவர்களிடம் தங்கியிராது தொழிலில் பல நுட்பங்கள் மற்றும் திறண்களை கண்டறிந்து தமது தொழில்களை சிறப்பாக செய்துவருவதுடன் தமக்கும் தம்மைசார்ந்தவர்களின் தேவைகளையும், நோக்கங்களையும் இலக்காக வைத்து தொழில்புரிந்து வருகின்றனர்.

இப்பிரதேசத்தில் படித்த ஆண்பிள்ளைகள் அரச தொழிலில் ஆர்வமின்றி தனியார் துறையினை தேர்ந்தெடுத்து வெளிநாடுகளுக்கு சென்று சில காலங்கள் சம்பாதித்துவிட்டு இங்கே வந்து அரச தொழிலையோ அல்லது தகுந்த சம்பளத்துடன் தனியார் தொழிலையோ பெற்றுக்கொள்ளமுடியாத துர்ப்பாக்கியமான நிலை இங்கு காணப்படுகின்றது. இதற்கு இவர்களின் குடும்ப சூழல் காரணமாக இருக்கலாம் என்பதுடன் பல குடும்பங்கள் நல்ல நிலையில் இருப்பதையும் காணமுடிகின்றது.

பெண்களை பொறுத்தவரையில் அதிகமானவர்கள் ஆசிரியர்களாகவும், முகாமைத்துவ உதவியாளர்களாகவும், கிராம சேவகர்களாகவும், சமுர்த்தி உத்தியோகத்தர்களாகவும் மாத்திரமன்றி சா/த, உ/த பரீட்சைகளில் நல்ல பெறுபேறுகளை பெறுபவர்களாகவும் அண்மைக்காலங்களில் அவதானிக்ககூடிய ஒன்றாக காணப்படுகின்றது.

இவ்விடயம் பாராட்டப்பட வேண்டியிருப்பினும் ஆண் பிள்ளைகள் குறைவான எண்ணிக்கையினரே அரச தொழில் பெறுவதற்கான முயற்சிகளிலும், உயர் கல்வியை கற்பதற்கான முயற்சிகளிலும், பட்டப்பின் படிப்பை தொடர்வதிலும் உதாரணமாக PhD. SLAS, SLEAS, SLPS. Eng. MBBS போன்ற துறைகளில் விரல்விட்டு எண்ணும் அளவிற்கு உள்ளனர்.
இது எதிர்காலத்தில் பாரிய தாக்கத்தையும் பின்டைவையும் ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை என்பதுடன் பெண்கள் தங்களது கல்வித்தரத்திற்கேற்ப கணவன்மார்களை தேர்ந்தெடுப்பதிலும் சிக்கலைத் தோற்றுவிக்கும் விடயமாகும்.

ஆண் பிள்ளைகளின் இவ்வாறான செயற்பாடுகளுக்காக பின்வரும் காரணங்களை குறிப்பிட முடியும்.

1. குடும்பச்சுமை
2. வறுமை நிலை
3. குறுகில காலத்தில் நிறைவாக உழைக்கமுடியும் என்ற மனோபாவம்
4. சோம்பேறித்தனம்
5. அவர்களுக்கான போதிய வழிகாட்டல் இன்மை 
6.குடும்ப உறவினர்களின் திணிப்புக்கள்
7.தந்தைக்கு உதவியாக தந்தை செய்யும் தொழிலையே மகன் செய்வது
போன்றவற்றை உதாரணமாக கூறலாம்.


இதற்கு எவ்வாறான தீர்வை பெற்றுக்கொள்வது
1.சிறுபராயத்திலிருந்தே இவ்வாறான விடயங்களை தெரிவித்து அவர்களை பயிற்சியளிக்க வேண்டும் 
2. கல்வியின்பால் சிந்தனைகளை அதிகரிக்கச் செயதல் வேண்டும்
3. சமூகத்தின் கல்வி மறுமலர்ச்சி தொடர்பான தேவைப்பாடுகளை உருவாக்குதல்
4.திறமையான பிள்ளைகளை இனம்கண்டு ஊக்குவித்தல் 5.கல்வி அபிவிருத்தி மையங்களை உருவாக்குதல் 6.எமது மொழி தவிர்ந்த ஏனைய மொழிகளை கற்பதற்கு ஊக்குவித்தல்
7.ஆண் பிள்ளைகள் கற்கும் பாடசாலைகளுக்கு பயிற்றப்பட்ட ஆளுமைமிக்க அதிபர்கள். ஆசிரியர்கள் மற்றும் வளங்களை அதிகரிக்கச்செய்தல்.
8.திறமையான பிள்ளைகள் வறிய நிலையில் காணப்படுவர் அவர்களுக்கான மோட்டிவேஷன் செய்தல்
9.துறை சார்ந்தவர்ளுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் வழங்கி துறைசார்ந்தவர்களை உருவாக்குதல்
10.இவ்வாறானவர்களை தொடர்ச்சியாக கண்காணித்தல்
11.இஸ்லாமிய ஒழுக்கவிழுமியங்கள் மற்றும் ஆண்மிக ரீதியான செயற்பாடுகளை அதிகரித்தல். 

இவை போன்ற விடயங்களை மேற்கொள்வதுடன் வீட்டுக்கொரு பட்டதாரியை உருவாக்க வேண்டிய தேவையும் உள்ளது.

எனவே குறிப்பிட்ட ஆண்டுக்குள் திட்டமிடப்பட்டு கல்வியின் பால் ஆண் பிள்ளைகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது இன்றைய காலத்தின் தேவையாகும்.
(இது ஒரு சிந்தனைக்கான பதிவாகும்.)
20.12.2018

No comments