காத்தான்குடியில் சிறப்பாக இடம்பெற்ற ஜனாஸா நலன்புரி அமைப்பின் நிகழ்வுகள்..
(பஹ்த் ஜுனைட்)


காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பின் அறிமுக நிகழ்வும் மாணவர்களுக்கான அன்பளிப்புக்கள் வழங்கும் நிகழ்வும் வெள்ளிக்கிழமை (14) அமைப்பின் காரியாலயத்தில் தலைவர் யூ.எல்.றபீக் தலைமையில் இடம்பெற்றது.ஜனாஸா நலன்புரி அமைப்பின் அறிமுகத்துடன்  பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப் பை ஆகியவை வழங்கும் நிகழ்வில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் , காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதர் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மாணவர்களுக்கான அன்பளிப்புக்களை வழங்கி வைத்தனர்.


இந்நிகழ்வில் உலமாக்கள், பாடசாலை மாணவர்கள், ஊர் பிரமுகர்கள், பொது மக்கள் என அதிகமானோர் கலந்துகொண்டனர்.
No comments