வெருகல் முகத்துவார வீதி புனரமைப்பு-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- 

வரையறுக்கப்பட்ட வெருகல் முகத்துவாரம் கிராம மக்கள் சக்திச் சங்கத்தினால் வெருகல் முகத்துவார பிரதான வீதி கிறவல் கொண்டு புனரமைப்புச் செய்யும் வேலைகள் வியாழக்கிழமை 20.12.2018 ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிராமிய உட்கட்டுமான வேலைத் திட்டத்தின் கீழ் இவ்வீதிப் புனரமைப்பு வேலைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.


வரையறுக்கப்பட்ட வெருகல் முகத்துவாரம் கிராம மக்கள் சக்திச் சங்கத்தின் தலைவர் நாகராசா ரகு தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வெருகல் பிரதேச செயலாளர் கே. குணநாதன், வெருகல் பிரதேச சபைத் தலைவர் கே. சுந்தரலிங்கம், உதவித் தவிசாளர் ரீ. சங்கர், உறுப்பினர்கள், கிராம சேவையாளர் எம். இராஜநாயகி, சமூர்த்தி பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கிராம மக்களும் கலந்து கொண்டனர்.

இப்பிரதேச மக்களின் போக்குவரத்துத் தேவைக்கு மிக அத்தியாவசிமாக இருந்த இந்த பிரதான வீதி செப்பனிடப்படுவது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாக கிராம மக்களும் அவ்வீதியைப் பயன்படுத்தும் ஆசிரியர்கள், மாணவர்கள், உத்தியோர்கள் பயணிகள் ஆகியோர் குறிப்பிட்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.