அதிக கற்கை நெறிகளை வழங்கும் மிட்ல் செக்ஸ் துபாய் பல்கலைக்கழகம் புலமைப்பரிசிலுடன் பதிவுகள் ஆரம்பம்


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
இலங்கையில் நாடு முழுவதும் உள்ள  Middlesex University யில் கற்கை நெறிகளைத் தொடரவிருக்கும் மாணவர்களுக்கு இப்பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்படுகின்ற கற்கை நெறிகள் பற்றி விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் எதிர்வரும் 22ஆம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பில் அமைந்துள்ள கிரீன் காடின் ஹோட்டலில் காலை 10 முதல் நண்பகல்1 மணிவரை கற்கைநெறி பற்றிய விளக்கமளிக்கும் செயலமர்வு  இடம்பெறவுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் உள்ளகற்கை நெறியைத் தொடர விரும்புவர்கள்  011 293 51 35 அல்லது 0112 50 53 53 மற்றும் வட்ஸ்அப் மூலமாக 071 593 51 35 என்ற தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளலாம்.


மேலும் இலங்கையின் எந்தப் பாகத்தில் இருப்பவர்களும் இக்கற்கை நெறியில் இணைந்து கொள்ளலாம் என்பதுடன் முதலில் கற்கை நெறியில் இணைந்து கொள்ளும் மாணவர்களுக்கு 10 ஐ போன்கள் வழங்கப்படவுள்ளதுடன் கற்பிக்கப்படுகின்ற கற்கை நெறிகள்புலமைப்பரிசில்களுடன்  வழங்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Middlesex University Dubai ஆனதுலண்டனில் Middlesex University யின் முதலாவது வெளிநாட்டு வளாகமாகக் காணப்படுகின்றது. 2005 ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்ட இப்பல்கலக்கழக வளாகத்தில் 140 நாடுகளைச் சேர்ந்த, 3,400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்கைகளை மேற்கொள்கின்றனர். இங்கு பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பு கற்கை நெறிகள் காணப்படுகின்றன. இங்கு சட்டம்உளவியல்கம்பியூட்டர் பொறியியல்தகவல் தொழில்நுட்பம்கணக்கியல் மற்றும் நிதியியல்சந்தைப்படுத்தல்மனிதவளம்க்ராஃபிக் டிசைனிங்திரைப்படம் மற்றும் ஊடகவியல் ஆகியன உள்ளிட்ட பல வகையான கற்கை நெறிகள் காணப்படுகின்றன. நேரடியாக LLB (British Qualifying Law)  சட்டமானிக் கற்கை கற்பிக்கப்படுகின்ற ஒரே பல்கலைக்கழகமாகவும் Middlesex University Dubai காணப்படுகின்றது.
கலாசார மற்றும் சர்வதேச ரீதியாக பல்வகைத்தன்மை கொண்ட மாணவர்களின் இலக்குகளை அடையும் வண்ணம்தரம்வாய்ந்த கற்கை நெறிகளை வழங்குவதற்கு Middlesex University Dubai செயற்படுகின்றது. இவை புத்தாக்க ஆய்வுகள்புலமைத்துவம் மற்றும் தொழில்வாண்மை பயிற்றுவிப்பு கொண்ட கற்கை நெறிகளாகும். தாம் வாழ்கின்றபணிபுரிகின்ற சமூத்துக்கு சிறந்த பங்களிப்புகளை வழங்குவதற்குத் தேவையான வகையில்நவீன உலகுக்குப் பொருத்தமான விதத்தில்தொழில்வாண்மையும்திறனும் கொண்ட மாணவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.

ஒரு பிரித்தானிய பல்கலைக்கழகத்தின் அனைத்து நன்மைகளையும் அனுபவிக்கின்ற அதேநேரம்மத்திய கிழக்கில் தொடர்ந்தும் வளர்ந்து வருகின்ற ஒரு நவீன நகரம் வழங்குகின்ற வாய்ப்புக்கள் மூலமும் நன்மயடைந்துகொள்ளலாம். அத்தோடுதுபாய் நகரின் சனத்தொகையை வடிவமைக்கின்ற பல்வேறு கலாசாரங்களையும் அனுபவிக்கலாம். இந்தப் பல்கலைக்கழக வளாகமானதுDubai Knowledge Park இல் 4 பெரும் கட்டிடங்களில் வகுப்பறைகளையும்கற்கை பகுதிகளையும் கொண்டமைந்துள்ளது. இந்த Dubai Knowledge Park ஆனதுகல்வியை ஊக்குவிப்பதற்காக 2003 இல் நிர்மாணிக்கப்பட்டது. எனவே, , Middlesex University Dubai மாணவர்கள் ஒரு பரந்த மாணவர் சமூகத்துடன் பங்கெடுப்பதற்கான வாய்ப்பைப் பெறுகின்றனர்.
மேலதிக விபரங்களுக்கு: www.mdx.ac.ae 
No comments