ஏறாவூர் நகர பிரதேச செயலக கலாசார விழா-ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

ஏறாவூர் நகர பிரதேச செயலக கலாசார விழா வாவிக்கரை பிரதேச கலாசார மண்டபத்தி;ல் வெள்ளிக்கிழமை 28.12.2018 மாலை நடைபெறவுள்ளதாக கலாசார உத்தியோகத்தர் எஸ்.ஏ. நழீம் தெரிவித்தார்.

ஏறாவூர் பிரதேச செயலகம் மற்றும் ஏறாவூர் கலாசாரப் பேரவையின் ஒழுங்கமைப்பில் இடம்பெறும் இந்நிகழ்வில் வழமை போன்று பிரதேசத்தின் கலாசார பாரம்பரியங்களை உயிர்ப்பிக்கும் கலாசார பாரம்பரிய  பண்பாட்டு நிகழ்வுகளும் துறைசார்ந்த கலைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களினதும் கௌரவிப்பும் இடம்பெறவுள்ளது.

இம்முறை இடம்பெறும் கலாசார விழா கலைஞர் கௌரவிப்பில் கலையாற்றலில் அக்கறை காட்டும் இளந் தலைமுறையினரும் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.

அன்றைய தினம் மாலை 3.30 மணியிலிருந்து இரவு வரை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments