பகலில் காணாமல்போன சிறுவன் நள்ளிரவில் வீடு வந்து சேர்ந்ததாகத் தெரிவிப்பு-ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஐயங்கேணி கிராமத்தைச் சேர்ந்த 10 வயதுச் சிறுவன் காணாமல்போனதாகக் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் இடம்பெற்று வந்த வேளையில் சிறுவன் நள்ளிரவில் வீடு திரும்பி விட்டதாக உறவினர்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

ஏறாவூர் -  மிச்நகர், ஐயங்கேணி கிராமத்தைச் சேர்ந்த ஹச்சி முஹம்மது முஹம்மது அத்தீப் (வயது 10) என்ற சிறுவன் ஞாயிற்றுக்கிழமை 16.12.2018 காலை வீட்டில் விளையாடிக் கொண்ருந்த சமயம் காணாமல் போயுள்ளார்.

இதுபற்றி உறவினர்கள் ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்து விட்டு தேடுதலிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அதேவேளை பொலிஸாரும் விசாரணைகளைத் துவங்கியிருந்தனர்.

இவ்வேளையில், திங்கட்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் சிறுவன் வீட்டிற்கு வந்துள்ளார்.

விசாரித்தபோது தனது உறவினருடன் வாகனத்தில் ஏறி கல்முனை நகருக்கு மரக்கறி வியாபாரத்திற்காகச் சென்று திரும்பிய விவரம் தெரிய வந்துள்ளது.

சிறுவன் மீண்டும் வீடு திரும்பியது பற்றி ஏறாவூர் பொலிஸாருக்கு உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

No comments