இன ஐக்கியத்தை ஏற்படுத்தும் வகையில் குவைத் நாட்டு கொடை ஸ்தாபனத்தின் நிதியுதவியில் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- 

இன ஐக்கியத்தை ஏற்படுத்தும் வகையில்  குவைத் நாட்டு அல்-நஜாத் அறக்கொடை அமைப்பினால் இலங்கை அந்-நூர் அறக்கொடை ஸ்தாபனத்தினூடாக பொது மக்களுக்கு குடி நீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து வருவதாக அந்-நூர் கொடையாளி அமைப்பின் சமூக சேவையாளர் எம்.எல். அப்துல் றஹ்மான் தெரிவித்தார்.

பொது மக்களுக்கு குடி நீர் வசதியளிக்கும் திட்டத்தின் கீழ் ஏறாவூர் சவுக்கடி கிராம வீடமைப்புத் திட்டத்திலுள்ள சுமார் 70 தமிழ்க் குடும்பங்களுக்கு கிணறுகள் வழங்கும் ஏற்பாட்டில் முதற் கட்டமாக 4 கிணறுகளைக் கையளிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை 16.12.2018 காலை இடம்பெற்றது.


மீதமுள்ள நிலத்தடிக் கிணறுகளை மிக விரைவில் அமைத்துக் கொடுக்கவுள்ளதாக அறக்கொடை அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இக்கிணறுகள் ஒவ்வொன்றும் சுமார் 15 ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

நிலத்தடி நீர்க் கிணறுகளைக் கையளிக்கும் இந்நிகழ்வில் அந்-நூர் கொடையாளி அமைப்பின் சமூக சேவையாளர்களான எம்.எல். அப்துல் றஹ்மான்  ஏ.எம். சலீம், ஐ.எம். அப்துல் அஜீஸ் ஆகியோருட்பட அதன் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.குவைத் நாட்டு அல்-நஜாத் அறக்கொடை அமைப்பின் நிதியுதவியுடன் இலங்கை அந்-நூர் அறக்கொடை ஸ்தாபனம் இலங்கையின் பல பாகங்களிலும் அனைத்து சமூக மக்களுக்குமான வாழ்வாதார உதவிகள், இடர் உலருணவு நிவாரணங்கள், உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக அதன் தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர். 

No comments