மண்முனைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அபிவிருத்திப்பணிகள்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும்,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான யு.எல்.எம்.என்.என்.முபீன் ,பாலமுனை மற்றும் காங்கேயனோடை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுக்களின் வேண்டுகோள்களின் பேரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,முன்னாள் பிரதியமைச்சருமான அஸ்ஸெய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் நிதியொதுக்கீட்டில் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்துக்குற்பட்ட நீண்டகாலமாக மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வந்த பல்வேறு பிரதேசங்களில் அபிவிருத்தி பணிகள் பல ஆரம்பிக்கப்பட்டு நடைபேறு வருகின்றன.
அந்த வகையில் காங்கேயனோடை மையவாடி வீதி வடிகாண் அமைப்பதற்காக ரூபா 10 இலட்சமும்,
காங்கேயனோடை பதுர் பள்ளியாவயல் குறுக்கு வீதி வடிகாண் அமைப்பதற்காக ரூபா 10 இலட்சமும்,
காங்கேயனோடை ஹிஸ்புல்லாஹ் வித்தியாலய வீதி மற்றும் குறுக்கு வீதி கொங்கிறீற்று வீதியாக அமைப்பதற்கு ரூபா 10 இலட்சமும்,
காங்கேயனோடைஈரான் சிட்டி அணைக்கட்டு அமைப்பிற்கும்,கிரவல் இடுவதற்குமாக 10 இலட்சமும்,பாலமுனை மாக்கார் வீதி இரண்டாம் கட்ட கொங்கிறீற்று இடும் பணிக்கு 10 இலட்சமும்,
ஹைராத் பள்ளிவாயல் பின் வீதி கொங்கிறீற்று இடுவதற்காக ரூபா 10 இலட்சமும், ஹைராத் பள்ளிவாயல் பின் வீதி கிறவல் இடுவதற்காக ரூபா 10 இலட்சம் மற்றும் கர்பலா மொடர்ன் பாம் வீதி கொங்கிறீற்று இடுவதற்காக ரூபா 10 இலட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதி நாட்டில் அரசியல் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்ட போதும் இந்த குறித்த வேலைத்திட்டங்களை செயற்படுத்த யு.எல்.எம்.என்.முபீன் அவர்கள் எடுத்துக்கொண்ட தொடர் முயற்சியின் காரணமாக மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தினூடாக கிராமோதய சங்கங்களோடு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வேலைத்திட்டங்கள் விரைவில் மக்களுக்கு கையளிக்கப்படுமென யு.எல்.எம்.என்.முபீன் அவர்கள் இதன்போது தெரிவித்தார்.

No comments