சம்மேளனத்தினால் கல்வியாளர்கள் வரவேற்பு நிகழ்வு..(எம்.பஹ்த் ஜுனைட்)

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் கல்வி அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணக்கல்விப் பணிப்பாளராக கடமையேற்றுள்ள எம்.கே.எம்.மன்சூர் (SLEAS) , மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளராக கடமையேற்றுள்ள கலாநிதி எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மெளலானா (SLEAS) ஆகிய இரு கல்வியாளர்களையும் வரவேற்க்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (9) சம்மேளனத்தின் அஷ்ஷஹீத் அஹமது லெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் சம்மேளனத்தின் கல்வி அபிவிருத்தி சபையின் ஸ்தாபகத் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.ஏ. ஜவாத்  தலைமையில் இடம்பெற்றது.இவ் வரவேற்பு நிகழ்வில்  பிரதேச கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். பதுர்தீன் உட்பட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், சம்மேளன உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

No comments