காத்தான்குடி பதுரியா பாலர் பாடசாலையின் 29வது வருடாந்த கலை மற்றும் பரிசளிப்பு நிகழ்வு- 2018
(S. சஜீத்)
காத்தான்குடியில் மிகவும் பழமை வாய்ந்த பாடசாலைகளில் ஒன்றாக காணப்பட்டு வரும் பதுரியா பாலர் பாடசாலையின் 29வது வருடாந்த கலை மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள் என்பன (21.12.2018 வெள்ளிக்கிழமை)   காத்தான்குடி பதுரியா மகளிர் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வானது பதுரியா பாலர் பாடசாலையின் பணிப்பாளர் எம்.ஐ.எம். ஹக்கீம் அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றதோடு... இந்நிகழ்வுக்காக காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான எம்.எம்.ஏ லெத்தீப் (அலிசப்ரி) மற்றும் எம்.ஐ.எம் ஜவாஹிர் ஆகியோர்கள் பிரதம அதிதிகளாக அழைக்கப்பட்டு கலந்து கொண்டிருந்ததுடன் சிறப்புப் பேச்சாளராக பிஸ்மி இஸ்லாமிய பாடசாலை பணிப்பாளர் அஷ்ஷெய்க். நுஸ்ரி (நளீமி) அவர்கள் கலந்து கொண்டு பாலர்களை சமூகத்திற்கு பணி செய்யக்கூடிய குழந்தைகளாக வளர்த்தேடுப்பது எவ்வாறு என்ற தலைப்பில் சிறப்பு  பேச்சினையும் நிகழ்த்தினர். மேலும் பாலர் பாடசாலையின் நிருவாக சபை உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள் என்று பலர் கலந்து கொண்டு மிகவும் சிறப்பான முறையில் ஆசிரியர்கள் மூலம் சிறுவர்களுக்கு கலை நிகழ்வுகள் பயிற்றுவிக்கப்பட்டு  நடைபெற்றன.இவ் குறித்த பாலர் பாடசாலையானது கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் பதுரியா விளையாட்டுக் கழக உறுப்பினர்களின் எண்ணக்கருவுக்கு அமைவாக ஆரம்பம் செய்யப்பட்டு இன்று வரை எவ்விதமான தங்கு தடையுமின்றி மிகவும் சிறப்பாக பயிற்சி பெற்று  அனுபவமிக்க ஆசிரியர்கள் மூலம் திறன் பட செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்நிகழ்வின் போது சென்ற வருடங்களில்  பாலர் வகுப்பில் கல்வி பயின்று இவ்வருடம் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.