வாசிப்புப் பழக்கம் இனங்களுக்கிடையில் பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்த உதவும். நூலகர் ஹரிஷா சமீம்


-ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

வாசிப்புப் பழக்கம் இனங்களுக்கிடையில் பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்த உதவுவதாக மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட களுதாவளை பொது நூலகத்தின் நூலகம் எம்.ஏ.சி. ஹரிஷா சமீம் தெரிவித்தார்.

வாசிப்பின் முக்கியத்துவம் தொடர்பில் திங்கட்கிழமை 05.11.2018 மேற்படி நூகலத்தில் வைத்து வாசகர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் வாசிப்பு ஒரு அழகான உன்னதமான விடயம், இது ஒரு கலை, வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி எல்லா சமயங்களும், எடுத்தியம்புகின்றன.

பல புலமையாளர்களும், கல்வியியலாளர்களும், அறிவியல் மேதைகளும், வாசிப்பு பற்றி பல்வேறு சிறப்பு மிக்க கருத்துக்களைக் கூறி வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தி வருகின்றனர்.

வாசிப்பின் உச்சநிலையை அடைந்த மிகச் சிறந்த வாசிப்பாளர்களின் எழுத்துக்களும், கருத்துக்களும்தான் இன்று பல்வேறு விடயங்களுக்கு, தற்போது மேற்கோளாகவும், முன்மாதிரியாகவும் காட்டப்படுகின்றன. இது இனங்களுக்கிடையில் பரஸ்பர புரிந்துணர்வையும், ஏற்படுத்துகின்றன.

இவ்வாறு பல சிறப்பம்சங்களைக் கொண்டு மனிதன் அவனுடைய எண்ணங்களை செதுக்கி ஒழுங்குபடுத்தி அழகு மிக்க, ஆழுமை மிக்க, பண்பு மிக்க, ஆற்றல் மிக்க, சக்திமிக்கவராக, வாசிப்பு ஒரு மனிதனை மாற்றுகின்றது.

இந்த சிறப்பம்சங்களைக் கொண்டு விளங்கும் வாசிப்பு பழக்கங்களை, ஊக்குவிக்கும் வகையில் நாடளாவியரீதியில் வருடாவருடம், நூலகங்கள் தோறும், பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள், முன்னெடுக்கப்பட்டு வருவது வாசிப்பின் மேன்மையை உணர்த்தி நிற்கின்றது.

எனவே மாணவர்கள், உள்ளிட்ட அனைவரும், தினமும் வாசிப்புப் பழக்கத்தைக் கடைப்பிடித்து சமூகத்தில் தலைசிறந்தவர்களாக மிளிர வேண்டும் என வேண்டுகின்றேன் என ஹரிஷா மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.