காத்தான்குடி நகரசபையின் 2019ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்திற்கு திட்ட முன்மொழிவுகளை நல்லாட்சிக்கான தேசிய முன்னனி சமர்ப்பிப்பு
(NFGGஊடகப் பிரிவு)

காத்தான்குடி நகரசபை நிருவாகம் 2019ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட தயாரிப்புக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது. இவ்வரவு செலவு திட்டத்திற்கான திட்ட முன்மொழிவுகளை நகர சபை உறுப்பினர்களிடம் நகரசபை நிருவாகம் கோரியிருந்தது. அதற்கமைவாக காத்தான்குடி நகர சபையில் அங்கம் வகிக்கும் நான்கு உறுப்பினர்களதும் திட்ட முன்மொழிவுகள் இன்று காத்தான்குடி நகரசபைத் தவிசாளரிடம் ந.தே முன்னனியின் காத்தான்குடி நகரசபை உறுப்பினர், MBM. பிர்தௌஸ் நளீமி அவர்களால் கையளிக்கப்பட்டது.

இத்திட்ட முன்மொழிவில் நோய்த்தடுப்புச் சேவைகள், வடிகாண்கள் மற்றும் வீதிகள் துப்பரவு செய்தல், மாதர் மற்றும் சிசு பரிபாலனம், சுகாதார மேம்பாட்டு வேலைத்திட்டம், திண்மக் கழிவு சேகரிப்பு, வீதிகள், வடிகான்கள், மற்றும் பாலங்கள், தெருமின்விளக்குகள், நூலக அபிவித்தி, சன சமூக நிலையங்கள், பொதுப் பொழுது போக்கு வசதிகள், பொது உதவிகள், தொழில் முன்னிலை வழிகாட்டல்கள், சிறுவர் பாடசலைகள், சமூக ஒழுக்கத்தை கட்டியெழுப்புதல் மற்றும் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்தல், சுத்தமான குடிநீர் விநியோகம், இஸ்லாமிய கலாசாரங்களையும், பிரதேச கலாசாரங்களையும் கட்டியெழுப்புதல் மற்றும் பாடசாலைக் கல்வி அபிவிருத்தி மற்றும் சமூக நலனோம்பல் ஆகிய பதினெட்டு தலைப்புக்களின் கீழான திட்ட முன்மொழிவுகளை நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர்.

அத்தோடு இத்திட்ட முன்மொழிவின் முன்னுரையில் 2019ம் ஆண்டிற்கான பஜட்டினைத் தயாரிக்கும் போது பின்வரும் விடயங்களை கவனத்திற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
01. அபிவிருத்தியின் போது சமூக, பொருளாதார, சுற்றாடல், சுகாதார ரீதியாக நீடித்து நிலவக் கூடிய நிலமைகளின் மீது கவனஞ் செலுத்துதல்.

02. மிகத் தேவையுடையோர், அல்லது மிகத் தேவையுடைய விடயம் அல்லது மிகத் தேவையுடை இடம் என்பவற்றிற்கு முன்னுரிமையளித்தல்.

03. எல்லாப் பங்காண்மையாளர்களையும் ஈடுபடுத்தல்.

04.நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை மையப்படுத்திய முழுமையான திட்டத்தினையும் தயாரித்தல்.

05. ஏனைய பங்குதாரர்களுக்கு வேறுபாடுகளுக்கு அப்பால் இடமளித்தல்.
06. வளப்பயன்பாட்டை உச்சப்படுத்தல்.

07. வீண்விரயம், மோசடிகளை இல்லாதொழித்தல்.


ஆகிய விடயங்களை கவனத்திற் கொண்டு 2019ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்திற்கூடாக சிறந்த திட்டமிடல் ஒன்றினைத் தயாரிக்குமாறு கோரப்பட்டுள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.