அமெரிக்காவின் யூத வழிபாட்டு மையத்தில் துப்பாக்கிசூடு


அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் உள்ள ஒரு யூத வழிபாட்டு மையத்தில் நுழைந்த ஒரு துப்பாக்கிதாரி துப்பாக்கிசூடு நடத்தியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ட்ரீ ஆஃப் லைஃப் என்ற அந்த வழிபாட்டு சபையில் உள்ளூர் நேரப்படி காலை 10 மணி அளவில் அவசர சேவை பிரிவுகள் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலில் பல உயிரிழந்துள்ளதாக பிட்ஸ்பர்க் நகர போலிஸ் துறை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்திய துப்பாக்கிதாரி போலீசாரிடம் சரணடைந்துள்ளதாகவும், அவர் போலிஸ் காவலில் உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் நடந்த பகுதிக்கு அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அப்போது போலிஸ் எச்சரித்தது.
நடக்கும் சம்பவங்களை தான் உன்னிப்பாக கவனித்து கொண்டிருப்பதாக டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.