மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களுக்கான ஊடகச் செயலமர்வு-ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடகப் பிரிவினால் பாடசாலை மாணவர்களுக்கான ஊடகச் செயலமர்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகர பிரதேசத்திலுள்ள 10 பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஊடகக் கற்கையைத் தெரிவு செய்துள்ள, உயர்தரத்தில் கற்கும் சுமார் 200 மாணவர்கள் இதில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளார்கள்.

மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில்  வியாழக்கிழமை (04.10.2018) காலை 8.30 மணியிலிருந்து பிற்பகல் 1 மணிவரை இந்த செயலமர்வு இடம்பெறவுள்ளதென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தமது எதிர்காலத்தைத் தெரிவு செய்யும்போது ஊடகவியல் பற்றிய அறிவையும் தம்வசம் கொண்டிருக்கவேண்டும் என்பதே இதன் நோக்கமாகும் என்று மாவட்ட தகவல் அதிகாரி வடிவேல் ஜீவானந்தம் தெரிவித்தார். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.