காத்தான்குடி ஹைறாத் வித்தியாலய மானவர்கள் ஹசீதா போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவுஏ.எல்.டீன் பைரூஸ்

2018 தேசிய மீலாத் மாகாண மட்ட போட்டிகள் (ஆரம்ப பிரிவு) ஹசீதா போட்டிகள் யாவும் கிழக்கு மாகானம் மூதுாரில்  இடம் பெற்றது. 

கிழக்கு மாகாணத்திலிருந்து   ஒன்பது பாடசாலைகள் மேற்படி போட்டி நிகழ்வுகளில் கலந்து  கொண்டிருந்த போதிலும் காத்தான்குடி  ஹைறாத் வித்தியாலய  மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி  தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர். 

மாணவர்களில் விடயத்தில் அதி கூடிய கவனம் செலுத்தி மாணவர்களை வெற்றி பெறச் செய்த வித்தியாலயத்தின் அதிபர் திருமதி அஜீறா கலீல்தீன் பாடசாலை சமூகத்தினரால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

தேசிய மட்ட போட்டிகள்  எதிர்வரும் (06.10.2018 ஞாயிறு) கொழும்பு மருதானை ஸாஹிறா கல்லுாரியில் இடம் பெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.