எதிரியாக இருந்தாலும் தோள் கொடுத்து தூக்கிவிடுபவர் பல்கலைவேந்தன் கலைவாதி கலீல்


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
தமிழ் பிழைகள் எங்கு ஏற்பட்டாலும் அதனை தட்டிக்கேட்பவர். குற்றங்களுக்கு குரல் கொடுப்பவர். பாராட்டப்பட வேண்டியவர்களை ஏணி கொடுத்து உயர்த்தி விடுபவர். எதிரியாக இருந்தாலும் தோள் கொடுத்து தூக்கிவிடுபவர்.  எள்ளளவும் கோபம் எடுக்காதவர்இப்படி அவரைப் பற்றி வர்ணித்துக் கொண்டே போகலாம்….
இவர் யாரென்று யோசிக்கிறீர்களா?
அவர்தான் நவமணிப் பத்திரிகையில் ஜலதரங்கம் மற்றும் இலக்கியச் சோலை என்பவற்றை தயாரித்து தொகுத்தளிக்கும் பல்கலைவேந்தன் கலைவாதி கலீல்.
மதாறுமுகைதீன் மீரா உம்மா தம்பதிகளின் மகனாக முஹம்மது கலீல் எனும் கலைவாதி கலீல் 1943 ஒக்டோபர் 13 ஆம் திகதி புதன்கிழமை மன்னாரில் பிறந்தார்.
கடந்த சனிக்கிழமை (13)  தனது அகவை 75 இல் காலடி வைத்திருக்கும் அவரின் தடம்பதித்த வரலாற்றை உற்று நோக்குவோமானால்...,
யார் இந்த கலைவாதி ?
மிகவும் பெயர் பெற்ற நொத்தாரிசுப்புலவர் குடும்பத்தில் பிறந்தவர்தான் கலைவாதி கலீல். தனது பள்ளிப் பருவ காலத்திலே அதாவது 1956ஆம் ஆண்டில்லட்டு’ என்ற மாசிகையில் மறைந்த இருள்’ எனும் மகுடத்தில் இவரது முதல் ஆக்கம் வெளியானது.  அன்று முதல் சிற்பக்கலைகரும்புகலைக்கடல்,செய்திமக்கள்தினகரன்வீரகேசரிதினக்குரல்,  மல்லிகைஈழநாடுஞானம்பாமிஸ் மாசிகைதீப்பொறிதொழிலாளிதேசாபிமானி,  நவமணி ஆகிய பத்திரிகைகளில் கவிதைசிறுகதைகட்டுரை,  துணுக்கு எனப் பல்வேறு கோணங்களில் தனது எழுத்தாளுமையை பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்.
1958 ஆம் ஆண்டில் கலைக்கடல்’ சஞ்சிகையிலும் மற்றும் அவரது சகோதரர் மக்கள் காதர் நடத்திய மக்கள்’ (1965) சஞ்சிகையிலும் தற்போது நவமணிப் பத்திரிகையிலும் ஆசிரியர் பீடத்தில் தடம் பதித்திருப்பவர்.
அந்த நாட்களில் புரட்சிக் கவிஞன் கே! என்ற புனைப்பெயரில்  நன்கு பரீச்சயமானவர்தான் கலைவாதி. இவைகளோடு புரட்சிதாசன்மன்னிநகர் கலீல்சர்தார்,மன்னாரான்தீட்சண்யன்பஸீரா மணாளன் எனப் பல புனைப் பெயர்களில் வலம் வந்த வித்துவான்.
இன்று பெரிய இடங்களில் மின்னிக் கொண்டிருப்பவர்கள் தாங்களை உருவாக்கி விட்டவர்களை துரும்பளவேனும் நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை. அதற்கு மாறாக கலைவாதி தூக்கிவிட்டவர்களை அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டே இருப்பார். தன்னை ஒரு காத்திரமான இலக்கியவாதியாக மக்கள் முன் நிறுத்தியவர் பிரபல பத்திரிகையாளர் அபூதாலிப் அப்துல் லத்தீப்தான் என்றும் அவர் நடாத்திய இன்ஸான்’ வாரப்பத்திரிகை (1966 - 69) தான் எனது இலக்கிய உயிர்ப்புக்கு ஊன்றுகோலாகவும் உறுதுணையாகவும் இருந்ததாகவும் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.
புரட்சிக்கவிஞன் கே!’ என்ற பெயரில் கவிதைகளையும், ‘மன்னீநகர்கலீல்’ என்ற பெயரில் சிறுகதைகளையும் மன்னாரான்’ என்ற பெயரில் செய்திகளையும்புரட்சிதாசன்’ என்ற பெயரில் கட்டுரைகளையும் சர்தார்’ என்ற பெயரில் பேனாசித்திரங்களையும் வரைந்தும் எழுதியும் இன்ஸான் பண்ணையின் மூலம் ஒரு கலக்கு கலக்கியுள்ளார்.
இன்ஸான் பண்ணையில் வளர்ந்தவன் நான்” என மார்தட்டிச் சொல்லுவதில் பெருமிதம் கொள்கிறார்.
பலாலி விசேட ஆசிரியர் கலாசாலையில் கல்வி கற்று இலங்கை கல்வி நிர்வாக சேவை - SLEAS – II  துறையில் தொழில் தகைமை பெற்ற இவர், -1963 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 01ஆம் திகதி திங்கட்கிழமை வில்பத்து - மறிச்சுக்கட்டி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் ஆசிரியராக முதல் நியமனம் பெற்றார். அன்று தொட்டு பல பாடசாலைகளில் ஆசிரியராகப் பணிபுரிந்திருக்கிறார்.
எழுத்துத்துறை மாத்திரமல்லாது அவர் இலத்திரனியல் துறையிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தியிருக்கிறார். இந்தவகையில் இருபத்தைந்து வருடத்துக்கும் மேற்பட்டது அவரது வானொலி வாழ்க்கை. வானொலியில் பங்கு கொண்டு சேவை ஒன்றுஇரண்டுமுஸ்லிம் சேவைகல்விச் சேவை,விளையாட்டுச் சேவை போன்ற வானொலிச்சேவைகளில் இலக்கிய மஞ்சரி,  சதுரச் சங்கமம் (குறுக்கெழுத்துப் போட்டி)இலக்கியக் களஞ்சியம்நூல் உலா,கதை கேளீர் (சிறுகதை கூறும் நிகழ்ச்சி)தொடர் கவியரங்குகள்,  கவிதை எழுதுவோம் வாரீர் மாணவர் மன்றம், (குட்டிக்கதைகள்) பிஞ்சு மனம் - (ஆமீனா பேகம்), ‘மணமேடையில் ஒரு நாடகம்’ - தொடர் நாடகம்மாதர் மஜ்லிஸ் ஆய்ஸா பைரூஸ்என நிகழ்ச்சிகளை தயாரித்திருக்கிறார்.  ஏன் இசையும் கதையும் கூட எழுதியிருக்கிறார். சாதித்திருக்கிறார்.
இவை மட்டுமல்லசொற்பொழிவுசிறப்புரைகள்உரைச்சித்திரம்தொலைக்காட்சிப் பிரதிகள் எழுதுதல் - தயாரித்தல் - நடித்தல்மேடை நாடகம் - பிரதி - நடிப்பு -  நெறியாள்கைகவிரயங்குகளிற் பங்கு கொள்ளல் - தயாரித்தல் - தலைமை வகித்தல்ஓவியம் வரைதல் -  பத்திரிகைகளுக்கு வரைதல்முகப் போவியங்கள் வரைதல்சுவரோவியங்கள் மற்றும் பெனர்’ வரைதல்நூல் எழுதுதல் - அச்சிடல் - வெளியிடல் போன்றவற்றிலும் தனது பங்களிப்பை வழங்கத் தவறவில்லை.
கலைஇலக்கியம் இரண்டும் கலைவாதியின் இரு கண்கள் எனலாம்.
உலகை மாற்றிய உத்தமர்(இயல் இசைச் சித்திரம்)ஒரு வெள்ளி ரூபாய் (சிறுகதைத் தொகுதி)கருவறையிலிருந்து கல்லறைக்கு (புதுக்கவிதைகள்),றோனியோக்கள் வாழுமா? (ஆய்வு நூல்),  ஓ! பலஸ்தீனமே (பலஸ்தீனப் போர்க் கவிதைகள்)வவுனியா முஸ்லிம்களின் வரலாறுமன்னார் முஸ்லிம்களின் வரலாறும் பண்பாடும் என்பவை அவர் எழுதிய நூற்களாகும்.
இவர் எழுதிய சிறுகதைத்தொகுதியில் பிரசுரமான ஒரு வெள்ளி ரூபாய்மையித்துசகோதரத்துவம்வர்க்கம்நோன்புக் கஞ்சி வண்டுஎனக்கு நானே எல்லாம்இன்னும் மனிதர்கள் இருக்கிறார்களா?,  யாருக்குப் பெருநாள்ஓடப்போறேன்புதிய அலை போன்ற கதைகள் சிலாகித்து கூறத்தக்கவை.
இவரது கதைகள் மொழிமாற்றம் செய்யப்பட்டு பல சிங்கள நாளேடுகளில் பிரசுரமாகியுள்ளதோடுஅனைத்துலக இஸ்லாமிய தமிழாராய்ச்சி மாநாட்டு மலரிலும் இடம்பெற்றுள்ளது. ஏழைச்சிறுமி றிஸானாநபீக் சவூதியில் மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டதை ஒரு சிறுகதையாக வடித்திருந்தார். அதுவிடிவெள்ளி’ வார இதழில் பிரசுரமானது. பின்னர் Daily Ceylon நாளோட்டில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. இவ்வாறு றிஸானா’ சிறுகதை பல மொழிகளில் பெயர்க்கப்பட்டு, 7 தடவைகள் பிரசுரமானவை குறிப்பிடத்தக்கது.
கலைவாதிக்கு தெரியாத ஒரு கலை இல்லை எனலாம். தீடீரெனப் பாடுவார். அவர் ஒரு பாடகரும் கூட. இது பலருக்குத் தெரியாது.
கலைவாதி - மன்னார்பல்கலைக்குரிசில் -  அடம்பன் மன்னார்தீந்தமிழ்ச் செல்வன் - அட்டாளைச்சேனை நூலகம்பல்கலைவேந்தன் தாஜுல் உலூம் - முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சு(1991), கலாபூஷணம் 1999 -(துறந்தது)கலாபூஷணம் (2002) - மன்னார் தமிழ்ச்சங்கம் செம்மொழி மாநாடு,இலக்கியவாருதி - காத்தான்குடி நவ இலக்கிய மன்றம் தேசமான்ய - (கொழும்பு) போன்ற பட்டங்களை தனதாக்கிக் கொண்ட கலைவாதிஉலக கவிஞர் தினத்தையாட்டி 2015ஆம் ஆண்டு கலாசார அமைச்சு முதற்தடவையாக முதுகவிஞர்களுக்கு காவ்யாபிமானி’ என்ற பட்டம் வழங்கியது. பின்னர் வழங்கப்படவில்லை. அவ்வாறு காவ்யாபிமானி’ பட்டம் பெற்ற ஒரேயொரு முஸ்லிம் கவிஞர் கலைவாதி மட்டுமே என்பது சிலாகிக்கத்தக்கது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஆரம்பகால உறுப்பினரான இவர். போரத்தின் முக்கிய பதவிகளில் இருந்துள்ளதோடுஇவ்வாண்டு பத்திராதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டமையும் மகிழ்ச்சிகரமான விடயம்.
 1967ஆம் ஆண்டு உம்முல் பஸீரா பீபீயை திருமணம் முடித்து இவருக்கு 2 ஆண் மற்றும் 2 பெண் பிள்ளைகளும் உள்ளனர்.  அனைத்து பிள்ளைகளையும் திருமணமும் முடித்துக் கொடுத்தும் விட்டார். 4 பிள்ளைகளைப் பெற்றாலும் இன்றும் வாலிபனாக - கம்பீரமாக கர்ச்சிப்பவர்தான் கலைவாதி கலீல்.
தாயின் 13 பிள்ளைகளில் 7 ஆவது மகனாக - இரட்டையரில் ஒருவராக இருக்கும் கலைவாதிதற்போது அவரது ஆண் சகோரர்களில்  இளைய சகோதரர் அப்துல் வஹாப் மற்றும் பெண் சகோதரிகளில் 3 பேரும் உயிருடன் உள்ளனர்.
இவரைப் போன்ற ஆற்றல் உள்ள ஒரு திறமைசாலியை நான் இதுவரை பார்த்ததில்லை. ஒரு செய்தியோகவிதையோஓவியமோ எதுவாக இருந்தாலும் ஒரு கணப்பொழுதில் வடிவமைத்து விடுவார். என்னைப்போல் இவரது திறமையைப்பார்த்து வியந்து பேசாதோர் யார்தான் உளர்?
ஆசிரியராகஅதிபராகவிரிவுரையாளராகஉபபீடாதிபதியாககலைஞனாக இருந்து தற்போது நவமணி ஆசிரியர் பீடத்திலே தனது பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கும் கலைவாதிபழகுவதற்கு இனியவர்பண்பாளர்அன்பானவர். மொத்தத்தில் மனிதநேயம் உள்ளவர். இவருக்கு எதிரிகள் யாரும் இருப்பார்களேயானால் அவர்கள் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களாகத்தான் இருப்பார்களே தவிரவேறு எவ்வழியிலும் இருக்கமாட்டார்கள்.
75 வயதிலும் தான் பயன்பெறாவிடினும் வளர்ந்துவரும் சந்ததிகளுக்கு பயனளிக்கக்கூடிய வகையில் அரசின் பல விருதுகளை போராடி வென்று சாதனை படைத்திருக்கிறார். அதற்கோர் ஓர் உதாரணம் கலாபூஷண விருதில் வழங்கப்படும் பொற்கிழியின் தொகை அதிகரித்தமை. இப்படிப் பல பல... அடுக்கிக் கொண்டே போகலாம்.
தன்னலம் கருதாதுதன்னை எதிரியாகப் பார்ப்பவரையும் அரவணைத்து அவருக்கும் வாய்ப்பளித்துபலபேரை எழுத்தாளர்களாக உருவாக்கிக்கொண்டிருக்கும் கலைவாதியை கௌரவப்படுத்த அவருக்காக பவளவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமூகத்துக்காககலைக்காக என்று முற்று முழுதான பணியாக தன் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கும் கலைவாதியின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற்று,  தேகாரோக்கியத்தோடு வாழ்ந்து மேலும் வெற்றிவாகை சூட இறைவன் துணைபுரிவானாக!
ஓய்வு எடுக்க வேண்டிய நேரத்தில் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் கலைவாதிக்கு எமது ஊடகம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.