காத்தான்குடி நபர் ஒரு கோடி முப்பது இலட்சத்திற்கும் மேற்பட்ட தங்க நகைகளுடன் தலைமறைவு


ஒரு கோடி முப்பது இலட்சத்திற்கும் மேற்பட்ட பெறுமதியான தங்க நகைகளுடன் காத்தான்குடியைச் சேர்ந்த நகை வியாபாரி ஒருவர்  தலைமறைவாகியுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் தெரிய வருவதாவது

வெளிமாவட்டத்தில் நகைக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்த நபர்  ஒருவா்   நகைக்கடை உரிமையாளர்களுக்கு நன்கு அறிமுகமான காத்தான்குடியைச் சேர்ந்த  மேற்படி நபர் பல வியாபாரிகளுடைய நகைகள் மற்றும் பல இலட்சம் ரூபாய் ரொக்கப்பணம் என்பவற்றை எடுத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக  தெரிவித்தனர்.

தப்பிச் சென்ற குறித்த நபர் பணத்தை பறி கொடுத்த கடை உரிமையாளர்களின் கைத்தொலை பேசிக்கு அழைப்பினை ஏற்படுத்தி தான் ஒருவரால் ஏமாற்றப்பட்டு விட்டதாகவும் தங்களுடைய பணத்தை மிக விரைவில் மீள தருவதாகவும், தன்னை மன்னித்துக கொள்ளுமாறும் கைத்தொலை பேசி ஊடாக கூறி வருவதாகவும்  பாதிக்கப்பட்ட தங்க வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.