காத்தான்குடி கடற்கரை வீதியில் அதிகரித்து வரும் வாகன நெரிசல்கள் மற்றும் விபத்துகளும்


விசேட காணொளி   இதனை கிளிக் செய்யவும்
https://www.youtube.com/watch?v=V2u0o1mVxq4

காத்தான்குடி கடற்கரை வீதியில் அதிகரித்து வரும் வாகன நெரிசல் காரணமாக  பொது மக்கள், பாதசாரிகள் என பலரும் பல்வேறு அசௌகரியங்களுக்கு நாளாந்தம் முகம் கொடுத்து   வருவதுடன்  வீதி  விபத்துகளும்  அதிகரித்து  வருவதனை அவதானிக்க முடிகின்றது.

காத்தான்குடி பிரதான வீதிக்கு அடுத்ததாக வாகனம்  மற்றும்  பொது மக்கள் அதிகம் பயன்படுத்தும்  வீதியாக காத்தான்குடி கடற்கரை வீதியினை  குறிப்பிடலாம்.

காத்தான்குடி கடற்கரை வீதியினை காலை 10.00 மணிமுதல் இரவு 11.00 மணிவரை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

போக்குவரத்து விதிமுறை சட்டங்களுக்கு அமைவாக   ஒற்றை மற்றும் இரட்டை நாட்களை குறிக்கும் பதாதை இரு மருங்கிலும் நடப்பட்டிருக்கின்ற போதிலும்  அதைனை யாரும் கன்டு கொள்ளவோ நட்டத்தை பேனவோ யாரும் முன்வராத நிலையே காணப்படுகி்னறது.

மேற்படி வீதியில் உள்ள கடை உரிமையாளர்கள்  சில சமயம் தங்கள் வாகனத்தை வீதியல் நிறுத்தி வைக்கின்ற  சந்தர்பங்களில்தான்  கூடுதலான வாகன நெரிசல் ஏற்படுவதுடன்  நேர கட்டுப்பாடின்றி    விரும்பிய  நேரங்களில்  கனரக வானங்களை நிறுத்தி வைத்து பொதிகளை  இறக்குவதும் நெரிசலை ஏற்படுத்துவதாக பலரும் குற்றம் சாற்றுகின்றனர்.


எது எப்படி இருந்த போதிலும் காத்தான்குடி நகர சபை இது விடயத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன்  நிலமை சீராகும் வரை போக்கு வரத்துப்  பொலிசார்  மேற்படி வீதியில் கடமைகளை தொடராக மேற் கொள்ள  போக்குவரத்து பொலிசாரை காத்தான்குடி நகர சபை பணிக்க வேண்டும்  என வர்த்தகர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்

கடந்த (09.10.2018 செவ்வாய் ) காத்தான்குடி கடற்கரை வீதியில் .இடம் பெற்ற வீதி விபத்தும்.  வாகன நெரிசலும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.