மில்லத் கல்லூரியின் அபிவிருத்திக்கு ஹிஸ்புல்லாஹ்வினால் நிதி ஒதுக்கீடு!(முகம்மது சஜீ)

காத்தான்குடி மில்லத்  மகளிர் கல்லூரியின் அபிவிருத்தி வேலைகளுக்கு முதற்கட்டமாக ஐம்பது இலட்சம் ரூபாய் நிதி நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் ஒதுக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையிலான தொழிநுட்பக் குழுவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மில்லத்  மகளிர் மகா வித்தியாலயத்திற்கு விஜயம் மேற் கொண்டனர்.

இதன் போது இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் பாடசாலையின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று இடம் பெற்றதுடன், கல்லூரியின் வரவேற்பு நுளைவாயில் சுற்று மதில், விளையாட்டுத்துறை ஒழுங்குகள் மற்றும் பாடசாலையை அழகு படுத்தும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக கலந்துறையாடப்பட்டது. இவ்வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்காக முதற்கட்டமாக ஐம்பது இலட்சம் ரூபாயினை ஒதுக்கியதுடன் எதிர்வரும் நவம்பர் மாதத்துக்குள் இவ் வேலைகளை நிறைவு செய்ய வேண்டும் எனவும் தொழிநுட்ப குழுவினருக்கு கட்டளை பிரப்பித்தார். மட்டக்களப்பு மத்தி வலயத்தின் கட்டிட வேலைகளுக்கான பொறுயியலாளர் முகம்மட் ஹக்கீம் பாடசாலையின் முதல்வர் ஜெசீமா முஸம்மில் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.