எமது மொத்த சனத் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் மாணவர்களாக இருக்கின்றார்கள் - கிழக்கு மாகாண ஆளுனர்.-ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

சிறுவர் பரம்பரை என்பது அவர்களின் செயல்களைக் காடு;டுவதற்கும் அவர்களை வினோதிப்பதற்குமான ஒரு பரம்பரைதான் சிறுவர் பரம்பரை என்பதாகும். அவர்களின் சிந்தனைகளில் சுதந்திரம் இருக்க வேண்டும். என கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித்த போகல்லாகம தெரிவித்தார். கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச சிறுவர் தின நிகழ்வு திங்கட்கிழமை (01) மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அதல் மேலும் தெரிவிக்கையில்....முன்பள்ளி ஆசிரிகர்களுக்குரிய கடமையாக இருப்பது சிறார்களுக்கு பாதுகாப்பான கல்வியை வழங்குவதோடு, அவர்களுக்குரிய சுதந்திரமான சூழலை உருவாக்கிக் கொடுப்பதுமாகும். கிழக்கில் 365000 மாணவர்கள் இருக்கின்றார்கள். முன்பள்ளி மாணவரக்ள் 57000 பேர் இருக்கின்றார்கள்.


எமது மொத்த சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் மாணவர்களாக இருக்கின்றார்கள். அவர்களது கல்வி செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்கும், அவர்களுக்குத் தேவயான உந்து சக்திகளை வழங்குவதற்குமான செயற்பர்டுளை மாகாணசபையினதும் எனைய அதிகாரிகளின் கடமையாக இருந்த கொண்டிருக்கின்றது. மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் அனைவரும் ஒன்றுகூடியிருப்பது அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு புதிய அனுபவமாகும். எனவே அவ்வாறான சிறார்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்க அனைவரும் இவ்வேளையில் திடசங்கற்பம் பூண வேண்டும் என அவர இதன்போது தெரிவித்தார்.

இதன்போது கிழக்கு மாகாண தமிழ், சிங்கள, முஸ்லிம் முன்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர். இங்கு சிறார்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, சிறார்களுக்கு பரிசில்களும், வழங்கி வைக்கப்பட்டன.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.