பிரதேச அபிவிருத்திக் குழு இணை தலைவர்களாக இருவர் நியமனம்மாட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கான பிரதேச அபிவிருத்திக் குழுக்களுக்கு புதிய இணைத் தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அந்தவகையில், கோரளை பற்று மேற்கு பிரதேச செயலக அபிவிருத்திக் குழு இணைத்தலைவராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாழைச்சேனை அமைப்பாளர் மீரா சாஹிம் ஹாரூன் நியமிக்கப்பட்டுள்ளார். 

அத்துடன், மண்முனை தென்- மேற்கு பிரதேச செயலக அபிவிருத்திக் குழு மற்றும் போரைத்தீவு பற்று பிரதேச செயலக அபிவிருத்திக் குழு ஆகியவற்றின் இணைத் தலைவராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் போரைத்தீவு பற்று அமைப்பாளர் தவஜானசூரியம் நியமிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.