கல்முனை ஸாஹிரா மாணவர்கள் தேசிய ரீதியில் வரலாற்றுச் சாதனை
(எம்.எஸ்.எம். ஸாகிர்)

அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற குறிபார்த்துச் சுடுதல் போட்டியில் கல்முனை ஸாஹிரா கல்லூரியின் மாணவர்களான எம்.எப்.ஜிப்ரி பைஸால்ஏ.எம்.அப்ரித் ஆகிய இரு மாணவர்களும் சார்ப்  (SHARP SHOOTER)  தெரிவு செய்யப்பட்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

இச்சாதனையானது பாடசாலை வரலாற்றில் முதல் தடவையானதும் வரலாற்று மைல்கல்லாகவும் இருக்கின்றது. பல்வேறு சிரமங்களுக்கும் கஷ்டங்களுக்கும் மத்தியில் நிகழ்த்தப்பட்ட இச்சாதனை கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மாகாண மட்ட குறிபார்த்துச் சுடுதல் போட்டியில் ஆறு மாணவர்கள் தேசிய போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டனர். (எப்.எம்.ஜிப்ரி பைஸால்ஏ.எம்.அப்ரித்என்.எம்.நிப்ரிரீ.ஏ. ஹபிஎப்.எம்.அஜாத்ஏ.ஜீ.எம்.அஸ்கி)  இப்போட்டியின் அகில இலங்கை ரீதியான போட்டிஇலங்கை பாடசாலைகள்  (SHARP SHOOTER)  சங்கம் ஏற்பாட்டில் அண்மையில் கொழும்பு நாலந்தா கல்லூரியில் இடம்பெற்றது.

விளையாட்டுத்துறையில் இவ்வாறான பல சாதனைகளை அண்மைக்காலமாக பாடசாலை அதிபர் எம்.எஸ்.முகம்மட் இன் வழிகாட்டலில் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு நல்கின்றனர்.

இவ்விளையாட்டுச்சாதனை படைத்த மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் ஏனைய உதவிகளை வழங்கிய அனைவருக்கும் கல்லூரியின் அதிபர் எம்.எஸ்.முஹம்மட் மற்றும் விளையாட்டுக்குழுத் தலைவரும் ஆசிரிருமான அலியார் பைஸர் ஆகியோர் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.