ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் காத்தான்குடி இரு தேசிய பாடசாலைகளின் அபிவிருத்திக்கு 98.5 மில்லியன் ரூபாய் நிதி கல்வி அமைச்சினால் ஒதுக்கீடு

 


நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் பாடசாலை அபிவிருத்திப் பணிகளுக்காக காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மற்றும் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை ஆகியவற்றுக்கு சுமார் 98.5 மில்லியன் ரூபாய் நிதி கல்வி அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையின் வகுப்பறை கட்டிட பணிகளுக்காக சுமார் 48 மில்லியன் ரூபாயும்,  காத்தான்குடி மத்திய கல்லூரியின் கேட்போர் கூட மிகுதி வேலைகளுக்காக சுமார் 40.5 மில்லியன் ரூபாயும் இவ்வாறு கல்வி அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறித்த பாடசாலைகளின் தேவைப்பாடுகள் சம்பந்தமாக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டு சென்றிருந்தார். இதற்கமைய கல்வி அமைச்சினால் மேற்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 

இதேவேளை, காத்தான்குடி பிரதேச கல்வி அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை காத்தான்குடி சம்மேளன மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது இது குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், பிரதேசத்திலுள்ள ஏனைய பாடசாலைகளின் தேவைப்பாடுகள் - அபிவிருத்தி சம்பந்தமாகவும் ஆராயப்பட்டது. 

அத்துடன், காத்தான்குடி கிழுறிய்யாh வித்தியாலயம் மற்றும் மெத்தைப்பள்ளி வித்தியாலயம் ஆகியவற்றை தரமுயர்த்துவது சம்பந்தமாக விசேட கவனம் செலுத்தப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது. 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.