முன்னாள் அமைச்சர் அஸ்வரின் முதலாம் வருட நினைவு தினம் பிரதம அதிதியாக ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு


முன்னாள் அமைச்சர் மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வரின் முதலாம் வருட நினைவு தின நிகழ்வு (31) வெள்ளிக்கிழமை மாலை கொழும்பு 10,  அல் - ஹிதாயா  மஹா வித்தியாலய பஹர்தீன் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் பீ.எம்.பாரூக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், கௌரவ அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தினேஷ் குணவர்தன கலந்து சிறப்பித்தார். 

இதேவேளை, விசேட பேச்சாளராக முன்னாள் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஏ.ஜி.ஹ{ஸைன் இஸ்மாயீலும், சிறப்பதிதிகளாக இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் சுபைர் மொஹமட் ஹம்தல்லா சைட், கொழும்பு மாநகர பிரதி மேயர் எம்.ரீ.எம்.இக்பால், முன்னாள் அமைச்சர்களான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மற்றும் திஸ்ஸ விதாரன ஆகியோர் கலந்து கொண்டனர். 

மேலும், முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன், சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் நிஹால் பாரூக், சட்டத்தரணி ரஷீட் எம் இம்தியாஸ் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.