காத்தான்குடியில் உள்ள சகல பார்மசி (மருந்தகம்) உரிமையாளர்கற்கும் இறுக்கமான கட்டளை முதல்வரின் முதல்கட்ட நடவடிக்கை.ஏ.எல்.டீன்பைரூஸ்

முதல்வர் என்ற தனது முழு அதிகாரங்களையும் பயன்படுத்தி போதைக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு வரும் காத்தான்குடி நகர முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்வரின் முயற்சி பாராட்டத்தக்க விடயமாகும்.

காத்தான்குடியிலுள்ள  சகல பார்மசி (மருந்தகம்) உரிமையாளர்களுடனான முக்கிய சந்திப்பு ஒன்று கடந்த  (21.09.2018 வெள்ளி) காத்தான்குடி சுகாதார வைத்திய பணிமனையில் இடம் பெற்றது. 

காத்தான்குடியிலுள்ள ஒவ்வொரு பார்மசிகளிலும்  மாத்திரைகள் விற்பனை செய்யும் வேளை உரிமையாளர்கள் அதி கூடிய கவனம் செலுத்துதல் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக வைத்தியரின் சிட்டு இல்லாமல்  வருபவர்கற்கு மாத்திரைகள்  விற்பனை செய்தல் எந்தவகையிலும் கூடாது என்பதுடன்    முக்கியமான வலி மாத்திரைகளை தொடராக பெறுபவர்கள் விடயத்தில்  விபரம் சேகரித்தல்  உட்படமேலும் பல முக்கிய விடயங்கள் இதன் பொது பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

காத்தான்குடி நகர சபையின் அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மற்றும் பங்குபற்றுதலுடன் துறைசார்ந்தவர்கள்,  ஊரின் முக்கியஸ்தர்கள் என சகலரினதும் மேலான   ஆலோசனைகள் பெறப்பட்டு  நகர முதல்வர் தலைமையில் மேற்கொள்ளப்படும் போதைக்கு எதிரான வேளைத்திட்டமானது பல்வேறு  வடிவங்களில்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.