காத்தான்குடி தள வைத்தியசாலையில் விரும்பிய நாட்களில் இரத்ததானம் செய்ய வருமாறு அழைப்பு.
ஏ.எல்.டீன் பைரூஸ்

காத்தான்குடி தள வைத்தியசாலையில் நீங்கள் விரும்பிய நாட்களில் இரத்த வங்கியில் (Blood bank)  இரத்ததானம் செய்ய முடியும் என வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த இரண்டு வருடங்களாக காத்தான்குடி தள வைத்தியசாலையில்  இரத்த வங்கியானது சிறந்த முறையில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இரத்த வங்கியில் தற்போது கடமையாற்றும் மும்மொழிகளிலும தேரச்சி பெற்ற நந்தமாலினி என்ற தாதி உட்பட வைத்திய உத்தியோகஸ்தரின்  அர்ப்பணிப்புடனான சிறந்த செயற்பாடுகள் பாராட்ட தக்கது என வைத்திய அத்தியட்சகர் Dr.MSM.ஜாபிர் தெரிவித்தார்.


இரத்த தானம் செய்ய வேண்டும் என விரும்பும் ஒவ்வொருவரும்  காத்தான்குடி தள வைத்திய சாலைக்குச் சென்று இரத்த தானம் செய்ய முடியும்.

நீங்கள் வழங்கும்  ஒவ்வொரு துளி உதிரமும் பல  வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் குறிப்பாக மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை, பொலன்னறுவை, கொழும்பு ஆகிய மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

எனவே...... 
     உதிரம் கொடுத்து உயிர் காக்கும் மனித நேயப் பணியில்  நீங்களும் இணைந்து கொள்ளுமாறு காத்தான்குடி தள வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.