கண்டி ஹுலுஹங்க முஸ்லிம் வித்தியாலத்தின் கல்விக் கண்காட்சி நிகழ்வு பிரதம அதிதியாக பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா பங்கேற்பு


ஊடகப்பரிவு
கண்டி மாவட்டத்தில் பன்வில்ல பிரதேசத்தில் அமைந்துள்ள ஹுலுஹங்க முஸ்லிம் வித்தியாலத்தின் கல்விக் கண்காட்சி ஆரம்ப  நிகழ்வு (26) புதன்) தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா அவர்களினால்  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கல்லூரியின் முதல்வர் இத்ரீஸ் தலைமையில் இடம்பெற்ற குறித்த கண்காட்சி  அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா அவர்கள் கலந்து கொண்டதுடன் , முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தவிசாளரும் முன்னாள் மத்திய மாகாண உறுப்பினருமான நயீமுல்லாஹ் Naeemullah Masihudeen அவர்களும் கலந்து கொண்டார்கள்.
குறித்த கல்விக் கண்காட்சி இன்றும் நாளையும் பாடசாலை வளாகத்தில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.