ஆசியக் கிண்ணத்தை சுவீகரித்த இலங்கை அணியின் பரிசளிப்பு விழாவில் சிங்கப்பூருக்கான இலங்கையின் பதில் தூதுவர் அமீர் அஜ்வத் மற்றும் அவர்பாரியார் அஸ்மியா அமீர்அஜ்வத் பங்கேற்றுசிங்கப்பூரில் நடைபெற்ற ஆசியக் கிண்ணத்துக்கான வலைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் 69-50 என்ற வித்தியாசத்தில் சிங்கப்பூரை வென்று ஆசியாவின் சம்பியனானது இலங்கை. இந்த வெற்றி மூலம் அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள உலக கோப்பை போட்டியில் பங்கு கொள்ள இலங்கை வலைப்பந்தாட்ட அணி தகுதி பெற்றுள்ளது. 

 புரூணை, பிலிப்பீன்ஸ், தாய்லாந்து, சீன தாய்பெய், ஹொங்கொங், பாகிஸ்தான், இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் , ஜப்பான், மாலைதீவு போன்ற நாடுகள் இத்தொடரில் பங்குபற்றின. பங்கு கொண்ட அனைத்துப் போட்டிகளிலும் இலங்கை வெற்றி பெற்று ஆசியக் கிண்ணத்தைச் சுவீகரித்தமை விசேட அம்சமாகும். 


 வெற்றிக்கிண்ணத்தை சிங்கப்பூர் ஜனாதிபதி மேதகு ஹலீமா யாகூப் அம்மையார் இலங்கை அணித் தலைவி சதுராங்கனி ஜயசூரியவிடம் வழங்கினார். சிங்கப்பூருக்கான இலங்கையின் பதில் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் தனது பாரியார் அஸ்மியா அமீர் அஜ்வத் சகிதம் இலங்கை சார்பாக இந்நிகழ்வில் கலந்து கொண்டு இலங்கை அணியை வாழ்த்தி பரிசளிப்பு விழாவிலும் கலந்து கொண்டார். 


சிங்கப்பூரில் வசிக்கும் புலம் பெயர்ந்த இலங்கையர்கள் ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தாயக அணியின் வெற்றிக்கு ஊக்கமளித்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.