பாலமுனையை நோக்கி படையெடுக்கும் போதை,மது பாவனையாளர்கள்


GK

பாலமுனை பாதுகாப்பான ஏரியா என்பதனால் பாலமுனையை நோக்கி  படையெடுக்கும்  போதை,மது  பாவனையாளர்கள்.

ஆரயம்பதி பாலமுனை என்பது மிகவும் அழகிய கிராமம் அக்கிராம மக்களின் ஆடம்பரமில்லாத வாழ்க்கை முறை, இயற்கையான சுற்றுச் சூழல் இவை அனைத்துமே அக்கிராமத்திற்குள் போவோர் வருவோரை நூறு வீதம் கவரும்  இடமாக பாலமுனை இருக்கின்ற நிலையில்  ஆபத்து அக்கிராமத்தை நோக்கி படையெடுப்பதாக சமகால புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ஏன் ..................

இன்று நாட்டில் அதிகம்  பேசு பொருளாக மாறியுள்ள  போதை விற்பனை மற்றும் போதை பாவனை என்பது இன்று இக்கிராமத்திற்குள் இடம் பெற்று வருவதாக அ றிய  முடிகின்றது.

இது தொடர்பான தேடலின் போது பல அதிர்ச்சியான  உண்மைச் சம்பவங்கள் பற்றி அறிய முடிகின்றது. குறிப்பாக  ஒரு சிலர் தொடராக பாலமுனை கடற்கரை வடக்கு மற்றும் தெற்கு பகுதியை மறைமுகமாக  மது பாவனைக்கு  பயன்படுத்தி வருவதாக தெரிவித்தனர்.

காத்தான்குடி தனவந்தர்களுக்குச் சொந்தமான ஒரு சிலரின் காணிகளில் வெள்ளி,சனி,ஞாயிறு  ஆகிய விடுமுறை நாட்களில் நண்பர்கள் சகிதம் குழுவாகச் சென்று பாட்டி என்ற பெயரில் 304 விளையாட்டில் ஈடுபடுவதுடன் போதைப்  பொருள் பாவனையும் கைமாறுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

பாலமுனை பாதுகாப்பான ஏரியா என்பதனால் பாலமுனையை நோக்கி  படையெடுக்கும்  போதை,மது  பாவனையாளர்கள்  மீது அதி கூடிய கவனம் செலுத்தி அவ்வாறானவர்களை மக்கள் முன் கொண்டுவருவதற்கு  பொறுப்பு வாய்ந்தவர்கள் கவனம் செலுத்துவார்களாயின் போதையற்ற பிரதேசமாக எமது பிரதேசத்தைக் கட்டியெழுப்ப  முடியும் என்பது பலரினதும் எதிர்பார்ப்பாகும்.

எதிர்பார்ப்பு  நிறைவேறும்  காலம்  வெகுதுாரமில்லைஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.