இந்திய தலைவரை கொன்று விட்டு இந்தியாவிடம் உதவி தேடிய பிரபாகரன். தப்பிச் செல்ல கப்பல் வருமென காத்திருந்த பிரபாகரன் இறுதியில் ஏமாற்றப்பட்டுள்ளார்.பிரபாகரன் தொடர்பில் புதிய தகவல் வெளியிட்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி.

2009ஆம் ஆண்டு போரின் இறுதிக்கட்டத்தின்போது அப்போதைய இந்திய காங்கிரஸ் அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் தொடர்பு கொண்டிருந்ததாக பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் போரின் இறுதிக்கட்டத்தின் போது அப்போதைய இந்திய அமைச்சர் "பாலா சிதம்பரம்" பிரபாகரனுக்கு தகவல் வழங்கியிருந்ததாகவும் பிரபாகரனை காப்பாற்ற இந்திய கடற்படை வரும் என்றும் அதற்காக காத்திருக்குமாறு அந்த தகவலில் குறிப்பிடப்பட்டிருந்ததாக சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பிரபாகரன் காட்டுப்பகுதியில் இருந்து கடற்கரையை நோக்கி நகர்ந்த தாகவும் எனினும் இலங்கை கடற்படையே அங்கு சென்றதாகவும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
இந்திய கடற்படைக் கப்பல் புறப்படத் தயாராக இருந்த போதும் அதிகாரிகளிடமிருந்து வெளியிடப்பட்ட கடுமையான எதிர்ப்புக் காரணமாக அந்தக் கப்பல் புறப்படவில்லை எனினும் குறித்த திட்டம் மாற்றப்பட்டமை தொடர்பில் அப்போதைய காங்கிரஸ் தலைமையினால் பிரபாகரனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமியின் அழைப்பை ஏற்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் அவரால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் ஊடகம் தெரிவித்துள்ளது.

sor.s/fm/n
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.