பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் பங்கேற்கும் சகல தரப்பினதும் விபரங்களை சுற்று நிருபமாக வெளியிடுக! உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரிடம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கைமக்களால் உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் பங்கேற்க முடியாது என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், குறித்த சுற்று நிருபத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியமான சகல தரப்பினதும் விபரங்களை தெளிவாக குறிப்பிடுமாறு நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் எஸ்.டீ. கொடிகாரவிடம் வேண்டுகோள் விடுத்தார். 

பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களுக்கு அந்தந்த பிரிவு உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை பங்குபெற செய்வது தொடர்பாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அண்மையில் சுற்று நிருபம் ஒன்றினை வெளியிட்டிருந்து. அதற்கமைய உள்ளுராட்சி மன்றத்தின் நகர முதல்வர் அல்லது தலைவர் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்த போதிலும் அதிகப்படியான வாக்குகளால் உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அதில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் எஸ்.டீ. கொடிகாரவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- 

“பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொள்வது சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபம் சில நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வாக அமைந்துள்ளது. என்றாலும், அதிகப்படியான வாக்குகளைப் பெற்று உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகள் இதன் மூலம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பங்கேற்க முடியாதுள்ளது.
இந்நிலையில், சர்வமதத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதி அல்லாத வேறு தரப்பினர், உள்ளுராட்சி மன்றங்களை பிரதிநிதித்துவம் செய்யாத கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என வேறு பல தரப்பினர் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் கலந்து கொள்கின்றன. இதனால், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பல சிக்கல்கள் உருவாகியுள்ளதுடன், தேவையற்ற விதத்தில் காலமும் - நேரமும் வீணடிக்கப்படுவதால் தேவையான முக்கிய விடயங்கள் கலந்துரையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
எனவே, குறித்த சுற்று நிருபத்துக்கு அமைய பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியுமான சகல தரப்பினதும் விபரங்களை தெளிவுபடுத்தப்படுமாயின் அதனை நிர்வகிக்கும் போது இலகுவாக அமையும். அதேபோன்று பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தின் நோக்கத்தை முறையாக நிறைவேற்ற முடியுமாக இருக்கும்.” - என அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.