நாளைய ஹர்த்தாலின் பின்னனி என்ன(விசேட நிருபர்)


நாளை (7 வெள்ளி ) தமிழ் பிரதேசங்களில்  மேற் கொள்ளப்படும் ஹர்த்தாலின் பின்னனி என்ன.......


பாராளுமன்ற கதிரையினை தக்கவைத்துக்  கொள்ள வேண்டும்  என்பதற்காக வேண்டி இனவாத செயல்பாடுகளை முன்னெடுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் உட்பட இன்னும் சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், தியேட்டர் மோகன் போன்ற சில இனவாதிகளால் மேற் கொள்ளப்படும் இனவாத செயல்பாடே இந்த ஹர்த்தாலின் பின்னனியாகும் என காத்தான்குடி நகர முதல்வர் SHM.அஸ்பர் JP தெரிவித்தார்.

புல்லுமலை நீர்த்தொழிற்சாலை ஒரு முஸ்லிம் உடையது என்ற ஒரே காரணத்தினால் அதனை இழுத்து மூட வேண்டும் என்பதற்காக  மக்களுக்கு பிழையாகக் காட்டி  அவற்றினையும் அரசியலாக்கி லாபம்பெற
மேற் கொள்ளும் சதித்திட்டமே  மேற்படி ஹர்த்தாலுக்கான  உண்மை காரணமாகும்.

புல்லுமலை நீர்த் தொழிற்சாலையினை உருவாக்குவதற்கு முன்னர் அதனால் ஏற்படும் சாதக,பாதகங்கள் என்பவற்றுடன் அதனால் யாருக்கும் பாதிப்புக்கள் வந்து விடக் கூடாது என்பதற்காக சட்ட ரீதியாக சகல அனுமதிகளையும் பெற்ற பின்னரே  மேற்படி நீர்த்தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகள்  மேற்கொள்ளப்படுகின்றது   எனத்  SHM. அஸ்பர் 

மேற்படி தொழிற்சாலை விடயத்தை அரசியலாக்கி அதன் நிர்மாணப்பனிகளை  தடுத்து நிறுத்த முயற்சிப்பது இனவாத செயல்பாடு என்று காத்தான்குடி நகர முதல்வர் SHM.அஸ்பர் JP தெரிவித்தார்.

மேலும் புல்லுமலை நீர்த் தொழிற்சாலையின் பணிப்பாளர் குழுமத்தில்தானும் ஒருவர் என்றும் காத்தான்குடி நகர முதல்வர் SHM.அஸ்பர் JP தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.