காத்தான்குடி குபா மற்றும் சின்னப் பள்ளிவாயளில் திருட்டுச் சம்பவம்......
ஏ.எல்.டீன்.பைரூஸ்

காத்தான்குடி ஆற்றங்கரை குபா பள்ளிவாயல் மற்றும் காத்தான்குடி  சின்னப் பள்ளிவாயளில் திருட்டுச் சம்பவம் இடம் றெ்றுள்ளதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை  ஜூம்ஆ தொழுகை நேரம் பார்த்து சின்னப் பள்ளிவாயனுல் நுழைந்த இனந்தெரியாதோர் அங்கிருந்த அம்புலிவயர் செட்டினை களவாடிச் சென்றுள்ளதாகவும் அதே போன்று காத்தான்குடி குபா பள்ளிவாயலில் இருந்து Water motor உட்பட இன்னும் சில பொருட்களையும் திருடிச் சென்றுள்ளதாக தெரிவித்தனர்.
திருட்டுச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை மேற் கொள்ள இரு பள்ளிவாயல்களிலும் CCTV  கெமரா பொருத்தப்பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அண்மைக்காலமாக பாடசாலை மற்றும் பள்ளிவாயல்களை இலக்கு வைத்து  காத்தான்குடியில் இடம் பெற்றுவரும் இவ்வாறான  திருட்டு சம்பவங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியது உரிய தரப்பினரின் பொறுப்பு என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

நாட்டினில் இடம் பெற்று வரும் அசாதாரண நிலமையினை கவனத்தில் கொண்டு பாடசாலைகள், மஸ்ஜிதுகள், பொது நிருவனங்கள் என சகலவற்றிக்கும் CCTV  கெமரா பொருத்துவது காலத்தின் தேவை என்பதனை கடந்த காலங்களில் பலரும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.