பாலியல் இலஞ்சம் கோரும் அதிகாரிகள் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிப்பு


GK


நுண்கடன் திட்டத்தினூடாக வாழ்வை தொலைத்து விட்டு அழுகின்ற ஏழை மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிப்பு.

வடகிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அப்பாவி  மக்களை இலக்கு வைத்து நுண்கடன் திட்டத்தினை அறிமுகப்படுத்தி கொள்ளை இலாபம் ஈட்டும் நிறுவனங்கள் இலங்கையில் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

கடன்களுக்கு கூட்டு வட்டியின் அடிப்படையில் 200 சதவீதத்திற்கும் மேற்பட்ட வட்டி அறவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சில பெண்களிடம் கடன் தவணை கட்டணத்தை திருப்பி செலுத்துவதற்கு பதிலாக பாலியல் லஞ்சம் கோரி அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் கடன் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் ஜோன் பப்லோ  பொஹோஸ்லாவ்ஸ்க் தெரிவித்துள்ளார்

இதேவேளை  கடனை திருப்பி செலுத்த முடியாமல் தற்கொலை முயற்சியில் ஈடுபட எத்தனிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.