காத்தான்குடி கடற்கரை காபட் வீதி ஆபத்தான நிலையில் பொது மக்கள் புகார்...........விசேட நிருபா்

காத்தான்குடி கடற்கரை (Marine drive) வடக்கு பக்கமாகவுள்ள  காபட் வீதியானது ஆபத்தான நிலையை எதிர்நோக்கியுள்ளதனை அவதானிக்க முடிகின்றது

மிகவும் குறிகிய காலத்திற்குள் போடப்பட்ட மேற்படி காபட் வீதியானது நில நடுக்கத்தில்  தாக்கப்பட்ட வீதி போன்று  துண்டு துண்டாக வெடித்து வருவதனைக் காணக்கூடியதாக  உள்ளதாக கடற்கரைக்கு வரும் பொது மக்கள் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

மேற்படி வீதியானது இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் அயராத முயற்சியால் மேற் கொள்ளப்பட்ட அபிவிருத்திப்பணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி குறித்த வீதியின் கொந்தராத்து காரா்கள் யார் ..?  மேற்படி   வீதியானது இவ்வாறு சேதமடைவதற்கான காரணம் என்ன....?   என்பதனையெல்லாம்  ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பது உரிய தரப்பாரின் பொறுப்பல்லவா..........


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.