சிறுவனை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய ஆலய பூசகர்கிளிநொச்சியில் ஆலய பூசகர் ஒருவர் சிறுவன் ஒருவனை அழைத்துச் சென்று அறையொன்றில் நாள் முழுவதும் பூட்டி வைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.


கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்திற்குட்பட்ட கோரக்கன்கட்டு பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு பூசைக்காக வந்த பூசகர் அப்பகுதியில் உள்ள சிறுவனை தன் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றுள்ளார் என அயலவர்கள் கூறியுள்ளனர்.

சிறுவனை கிளிநொச்சியில் உள்ள வீடொன்றின் அறையினுள் நாள் முழுதும் பூட்டி வைத்து பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியதன் பின் குறித்த சிறுவனை வேறொருவருடன் அவரது சொந்த இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து குறித்த சிறுவன் தனக்கு நடந்த சம்பவத்தை அயலவர்களுக்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த தகவல் வெளியாகியுள்ளதாக தெரிகிறது.

இச்சம்பவம் தொடர்பில் கண்டாவளைப் பிரதேச சிறுவர் நன்னடத்தை அதிகாரிக்கு சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்ட சிறுவனை கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இவ் விடயம் தொடர்பான விசாரணைகளை மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளளனர்.
sor/yavi
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.