காத்தான்குடி நகர முதல்வரின் கண்டிப்பான உத்தரவு


ஏ.எல்.டீன் பைரூஸ்

காத்தான்குடி கடற்கரைக்கு பொழுதினைப் போக்க தினமும்  வருகின்ற ஒவ்வொருவரும் கடற்கரையின் சுற்றுச்சூழல் மற்றும் பொது இடங்களை அசுத்தமாக்கின்ற விதமாக
நடத்தல் கூடாது.இது  விடயத்தில் சகலரும் மிகக் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை மேற் கொள்ள வேண்டி நேரிடும் என காத்தான்குடி நகர முதல்வர்  SHM.அஸ்பர் JP தெரிவித்தார்.

அண்மைக்காலமாக சிலர் இரவு நேரங்களில் கடற்கரை மணலில் கற்கலைக் கொண்டு வந்து அடுப்பு மூட்டி "கோழி சுடுதல், மீன் கடுதல், சமைத்தல் போன்ற விடயங்களில் ஈடுபட்ட பின்னர்
வீடு செல்லும் போது இடத்தினை சுத்தம் செய்யாது  சென்று விடுகின்றனர்.
இன்னும் சிலர் அடுப்புக்கு பயன்படுத்திய கற்களை மணலினுல் புதைத்து விட்டுச் சென்று விடுகின்றனர் இது முற்றிலும் தவறான செயல்பாடாகும்.

கடற்கரை மணலை சுத்தம் செய்வதற்காக நகர சபையால்   "Beach Clean Machine" பயன்படுத்தப்படுவதனால் இயந்திரத்தை காலை வேளைகளில் பயன்படுத்தும் போது சென்கல்லுகள், கட்டை, கம்புகள் என பலவற்றை சிலர் விட்டுச் செல்வதனான் பல பிரச்சினைகளுக்கு நாம் முகம் கொடுக்க வேண்டி உள்ளதாக 
நகர முதல்வர் SHM.அஸ்பர் JP தெரிவித்தார்.

ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பெறுமதியான "Beach Clean Machine"  கடற்கரை மணலை சுத்தம் செய்வதற்காக நாங்கள் பயன்படுத்தி வருகின்றோம்.

கடற்கரையினை அசுத்தப்படுத்தும் யாராக இருந்தாலும் அவர்களை இனம் கன்டு தராதரம் பாராது அவர்களுக்கு ஏதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் நகர முதல்வர் SHM.அஸ்பர் JP தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.