இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் காத்தான்குடி வைத்தியசாலையின் ஆளணி அதிகரிப்பு


காத்தான்குடி தள வைத்தியசாலையில் நீண்ட காலம் நிலவி வந்த ஆளணி பற்றாக்குறை நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அயராத முயற்சியினால் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. 


காத்தான்குடி தள வைத்தியசாலையின் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்து அதனை அதிகரிப்பது சம்பந்தமாக பொது நிர்வாக அமைச்சு, தேசிய சம்பளங்கள் பதவியணிகள் ஆணைக்குழு (national salaries and cadres commission)மற்றும் நிதி அமைச்சின் முகாமைத்துவ சேவை திணைக்களம் என்பவற்றிடம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தொடர்ந்து விடுத்து வந்த கோரிக்கைக்கு அமைய அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


இதற்கமைய காத்தான்குடி தள வைத்தியசாலையில் பல புதிய வெற்றிடங்கள் உருவாக்கப்பட்டு மேலதிக ஊழியர்கள் நியமிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், வைத்திய ஆலோசகர்கள் 5, வைத்திய நிபுனர்கள் 32, தாதிமார்கள் 50 மற்றும் சிற்றூளியர்கள் 45 என மொத்தம் 196 ஊழியர்களை கொண்டதாக வைத்தியசாலையின் ஆளணி அதிகரிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். 


இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,

‘ காத்தான்குடி தள வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதிமார்கள், சிற்றூளியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இது விடயம் சம்பந்தமாக நான் தொடர்ச்சியாக விடுத்து வந்த கோரிக்கைக்கு அமைய அதற்கான அனுமதியினை நிதி அமைச்சின் முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் வழங்கியிருந்தார்.’ என்றார்


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.