காத்தான்குடி கர்பலா அல்-மனார் வித்தியாலயத்தில் திருடர்கள் அட்டகாசம்.


(ஏ.எல்.டீன் பைரூஸ்)

மட்டக்களப்பு மத்தி

கல்வி வலயத்தின் கீழ் இயங்கும் காத்தான்குடி கர்பலா அல் மனார் வித்தியாலயத்தின் அதிபர் காரியாலயம் உடைக்கப்பட்டு அங்கிருந்த  பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக வித்தியாலயத்தின் அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எல்.பதுர்தீன் (நழீமி) தெரிவித்தார்.

அதிபர் மேலும் தெரிவிக்கையில் சனி, ஞாயிறு பாடசாலை விடுமுறை என்பதனால் திங்கட்கிழமை வழமை போன்று பாடசாலைக்கு வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு பல பொருட்கள் திருடப்பட்டுள்ளதனை  அறிந்து கொண்டதாக அதிபர் தெரிவித்தார்.

களவாடப்பட்டுள்ள பொருட்களில் பெருமதியான 
அம்புலி வயர் செட் , 5 ஸ்பீக்கர், கனணி , 2 KDK மின் விசிறி, 2 நீர்தாங்கி உட்பட மேலும் பல பொருட்கள் திருடப்பட்டுள்ளதனை அடுத்து காவல் நிலையத்தில்  செய்த முறைப்பாட்டினை அடுத்து பொலிசார் மேலதிக விசாரனைகளை மேற் கொண்டு வருவதாகவும் அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எல்.பதுர்தீன் (நழீமி) தெரிவித்தார்.மேற்படி வித்தியாலம் மிகவும் பின்தங்கிய வறிய மாணவர்கள் கல்வி கற்று வரும் (Type III) பாடசாலை என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.