காத்தான்குடி அல்-மதீனா விளையாட்டுக் கழகத்தின் 28வது வருடாந்த விழா.


ஏ.ஏல்.டீன் பைரூஸ்
காத்தான்குடி அல்-மதீனா விளையாட்டுக் கழகத்தின் 28வது வருட நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட அஸ்ரப் ஞாபகார்த்த நினைவுக்கிண்ண மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் பரிசளிப்பு விழா  (23 ஞாயிறு) காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) மைதானத்தில் இடம் பெற்றது.

நிகழ்வின்  முதன்மை அதிதிகளாக கிராமிய பொருளாதார அபிவிருத்தி மற்றும் கடற்தொழில் நீரியல்வள  பிரதி அமைச்சர் MSS.அமீர்அலி அவர்களின் காத்தான்குடி பிராந்திய இணைப்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான அல்ஹாஜ் AMM.மாஹிர்(JP) மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் காத்தான்குடி மத்திய குழு செயலாளரும் நூறாணியா 04ம் வட்டார அமைப்பாளருமான SM.சப்ரி அவர்களும் கலந்து கொண்டனர்.

மேற்படி போட்டி நிகழ்வில் பல அணிகள் பங்குபற்றிய போதிலும் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகி முதல் இடத்தை தனதாக்கிக்கொண்ட இலாஹீஸ் அணிக்கும் இரண்டாம் இடத்தைப் பெற்ற அல்-பலாஹ் அணிக்குமான வெற்றிக்கேடயங்கள் பிரதம அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன. என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.