முஸ்லிம் திணைக்களம் நடாத்திய முஹர்ரம் புதுவருட நிகழ்வு 2018


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இலங்கை அஹதியா மத்திய சம்மேளனம் மற்றும் கொழும்பு மாவட்ட அஹதியா பாடசாலை சம்மேளனம் ஆகியவற்றோடு இணைந்து நடாத்திய 1440 ஆவது முஹர்ரம் புதுவருட நிகழ்வு  (19) புதன்கிழமை தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

தபால்தபால் சேவைகள் முஸ்லிம் சமய அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தலைமையில் முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷேக் எம்.ஆர்.எம். மலிக் (நளீமி)உதவிப் பணிப்பாளர் றியாஸா நௌபல் ஆகியோரின் வழிகாட்டலிலும் அஷ்ஷேக் எம்.எம்.எம். முப்தி (நளீமி)யின் ஒருங்கிணைப்பிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில், 1440ஆவது முஹர்ரம் புதுவருடத்தை சிறப்பிக்கும் முகமாக கொழும்பு மாவட்ட அஹதியா பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்அஹதியா பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அஹதியா மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

அமைச்சல் ஹலீம்அமைச்சர் பௌசிதிணைக்களப் பணிப்பாளர் அஷ்ஷேக் எம்.ஆர்.எம். மலிக் (நளீமி)உதவிப் பணிப்பாளர் றியாஸா நௌபல்தபால் மா அதிபர் உட்பட உயர் அதிகாரிகள்உலமாக்கள்மாணவர்கள்பெற்றோர்கள்ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.