தேசிய தெளஹீத் ஜமாஅத்தினரின் (NTJ) ஹஜ் பெருநாள் திடல் தொழுகை சிறப்பாக இடம் பெற்றது.(ஏ.எல்.டீன் பைரூஸ்)

காத்தான்குடியை தளமாகக் கொண்டு இயங்கும் (NTJ) தேசிய தெளஹீத் ஜமாஅத்தினரின் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை காத்தான்குடி 
ஏத்துக்கால் கடற்கரை பகுதியில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.

நபி வழியில் பெருநாள் தொழுகை என்ற சுன்னாவின் அடிப்படையில் பல சிறப்பான ஏற்பாடுகளுடன் இடம் பெற்ற மேற்படி ஹஜ் பெருநாள் 
திடல்  தொழுகையில் ஆண்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் 
கலந்து கொண்டனர்.

மேற்படி திடல் தொழுகை மற்றும் குத்பா உரையினை அஷ்ஷெய்க் முகம்மது தவ்பீக் (பலாஹி) அவர்களால் நிகழ்த்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments