காத்தான்குடியில் எம்மால் மேற்கொள்ளப்படுகின்ற ஒவ்வொரு அபிவிருத்தியிலும் சுஹதாக்களுக்கு பங்குண்டு - இராஜாங்க அமைச்சர் MLAM.ஹிஸ்புல்லா

000
(ஏ.எல்.டீன்பைரூஸ்) 
காத்தான்குடியில் எம்மால் மேற்கொள்ளப்படுகின்ற ஒவ்வொரு அபிவிருத்தியிலும் சுஹதாக்களுக்கு பங்குண்டு என நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி MLAM.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

கடந்த 03.08.2018 வெள்ளி அன்று சுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனம் காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இல்வாறு தெரிவித்தார். 

1990 பள்ளிவாயல்களில் இறைவணக்கத்தில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் சகோதரர்களை பாஷிசப் புலிகள் படுகொலை செய்தது என்பது உலகில் யாரும் ஏற்றுக் கொள்ளாத ஒரு விடயமாகும். 1990 களில் பின்னர்தான் வடகிழக்கு முஸ்லிம்களின் பாதுகாப்பு குறித்து பேச வேண்டிய தேவை ஏற்பட்டது. 

1990இல் நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலம் காத்தான்குடி படுகொலை சம்பவத்தின் பின்னர் எமது மாவட்டத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய தலைவர் மர்ஹூம் MHM.அஷ்ரப் அவர்களோடு இணைந்து பிரதமர் ஆர். பிரேமதாச அவர்களோடு பல சுற்றுப் பேச்சுக்களை மேற் கொண்டு நாம் பாதுகாப்பினை உறுதிப்படுத்தினோம். 

அரசாங்கத்தின் அனுமதியோடு ஆயுதங்களையும் வைத்துக்கொண்டு பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் 
எமது மண்ணையும், மக்களையும் பாதுகாக்க பல்வேறுபட்ட முயற்சிகளை மேற் கொண்டதாகவும் இராஜாங்க அமைச்சர் கலாநிதி MLAM.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

No comments