காத்தான்குடி கடற்கரை (Marine drive) வீதி முழுமையாக காபட் வீதியாக மாற்றப்படும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா

நமது நிருபர்

காத்தான்குடி கடற்கரை (Marine drive) வீதி உட்பட பல வீதிகள் முழுமையாககாபட் வீதியாக மாற்றப்பட வுள்ளதாக நேற்று(17 வெள்ளி) ஹிஸ்புல்லா பாலர் பாடசாலை நிகழ்வில் கலந்து  கொண்டு  உரையாற்றுகையில் இராஜாங்க அமைச்சர் MLAM .ஹிஸ்புல்லா இவ்வாறு தெரிவித்தார்.


எமது பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்தி  தொடர்பில் பல்வேறு வேலைத் திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
காத்தான்குடி டெலிகொம் வீதி  முழுமையாக காபட் இடப்படுகின்றன  அதே போன்று காத்தான்குடி கடற்கரை (Marine drive) வீதி, புதிய காத்தான்குடி அல் அக்சா வீதி, மத்திய வீதி, மீன்பிடி இலாகா வீதி, கர்பலா வீதி, பாலமுனை, பூனச்சிமுனை வீதிகள் யாவும் முழுமையாக
காபட் வீதியாக மாற்றப்பட உள்ளதுடன் இதற்கான நிதிகள் யாவும் என்னுடைய அமைச்சிலிருந்து ஒதுக்கப்பட்டிருப்பதுடன்  டென்டர்களும் கோல் பன்னப் பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி MLAM.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

 ஜனாதிபதி தலைமையில் அபிவிருத்திப் புரட்சியினை மேற்கொள்ள உள்ளதுடன் மாவட்டத்திலுல்ல வீதிகளின் | பிரச்சினைகளை தீர்த்து வைக்கவே நாம் இந்த அமைச்சுப் பொறுப்பினை பார மெடுத்ததாக இராஜாங்க அமைச்சர் கலாநிதி MLAM.ஹிஸ்புல்லா இதன் போது தெரிவித்தார்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.